'எல் 2 எம்புரான்' படத்தின் பட்ஜெட் இவ்வளவுதானா ? | அஜித், தனுஷ் கூட்டணியை உறுதி செய்த தயாரிப்பாளர்! | சல்மான்கான் சொன்ன கதைக்கு மறுப்பு தெரிவித்து ஏ.ஆர். முருகதாஸ்! | தனுஷ், விக்னேஷ் ராஜா படத்தின் புதிய அப்டேட்! | பாவனாவின் வருஷம் 14! | முதல் பாகத்தில் இறந்தேன்.. 2ம் பாகத்தில் நடித்துள்ளேன் ; எம்புரான் நடிகர் வைக்கும் டுவிஸ்ட் | 15 கோடி கேட்கும் ரவுடி பேபி | ‛கட் அண்டு ரைட்'டாக பேசும் நடிகை | 'இன்ஸ்டன்ட் ஹிட்' ஆன 'ரெட்ரோ' கனிமா….. | 'மதராஸி' படப்பிடிப்பு எப்போது முடியும்? |
கடந்த ஆண்டில் மலையாளத்தில் ஹனிப் அதேனி இயக்கத்தில் உன்னி முகுந்தன் நடித்து வெளிவந்த படம் 'மார்கோ'. இப்படம் முழுக்க முழுக்க ரத்தம் தெறிக்க ஆக்சன் படமாக வெளியாகி உலகளவில் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது. ஏற்கனவே மார்கோ 2ம் பாகம் உருவாகிறது என அறிவித்துள்ளனர்.
தற்போது உன்னி முகுந்தன் அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது, "இந்தியாவின் அதீத வன்முறையான ஆக்சன் படம் என்பதை நாங்கள் வெளிப்படையாக கூறி விளம்பர படுத்தியது கூட அதற்கான ரசிகர்களிடம் சென்றடையும் என்பதால் தான். அதனால் மார்கோ படத்திற்கான ரசிகர்கள் அடுத்த பாகத்திற்கு என்ன எதிர்பார்த்து வருவார்கள் என்பதையெல்லாம் சரியாகக் கணித்து பிரஷரை ஏற்றிக் கொள்ளாமல் மார்கோ 2 கதையை உருவாக்க வேண்டும். அதற்காக முழு உழைப்பைக் கொடுக்க நான் தயாராக இருக்கிறேன். " என தெரிவித்துள்ளார்.