ஜுலை 4ல் 6 படங்கள் ரிலீஸ் | 2025ன் 6 மாதங்களில் 122 படங்கள் ரிலீஸ் | விமர்சனம் என்ற பெயரில் சினிமாவை கொலை செய்யும் யூடியூபர்கள்: சுசீந்திரன் காட்டம் | இரண்டேகால் படம் : விமல் சொன்ன புதுக்கணக்கு | அனிமல் படம் குறித்த விமர்சனத்திற்கு ராஷ்மிகா கொடுத்த பதிலடி | கே.பி.ஒய் பாலாவின் ‛காந்தி கண்ணாடி' டைட்டில் முன்னோட்ட வீடியோ வெளியீடு | அவதூறு பரப்புவோர் மீது சட்ட நடவடிக்கை : நடிகர் சங்கம் எச்சரிக்கை | தேரே இஸ்க் மெயின் படப்பிடிப்பு நிறைவு | இயக்குனராக 18 ஆண்டுகளுக்கு பின் தெலுங்கு சினிமாவிற்கு திரும்பும் பிரபுதேவா | மீண்டும் சிவகார்த்திகேயன் படத்துடன் மோதும் துல்கர் சல்மான் படம் |
இன்றைக்கு தமிழ் சினிமாவில் நவீன டிஜிட்டல் வசதியுடன் செய்யப்படும் தொழில்நுட்ப முயற்சிகள் அனைத்தும் அன்றைய கால கட்டத்திலேயே சிறிய அளவில் செய்யப்பட்டுள்ளது. 'உத்தம புத்திரன்' படத்தில் பி.யு.சின்னப்பா 2 வேடங்களில் நடித்தார். இரண்டு சின்னப்பாக்கள் ஒரே பிரேமில் தோன்றி நடித்தது அன்றைய தொழில்நுட்ப சாதனையாக இருந்தது. மக்களால் வியந்து பார்க்கப்பட்டது.
அதன்பிறகு மக்களை வியக்க வைத்தது 1944ம் ஆண்டு வெளிவந்த 'ஜெகதலபிரதாபன்' என்ற படத்தில் ஒரே பிரேமில் 5 பி.யு.சின்னப்பா தோன்றியதுதான். கதைப்படி அவர் ஒரு இசை கச்சேரி நடத்துவார். அந்த கச்சேரியில் மிருதங்கம், வயலின், வாய்ப்பாட்டு, ஜால்ரா, தப்பு என 5 இசை கருவிகளை பயன்படுத்தி அவரே அனைத்துமாய் அந்த கச்சேரியை நடத்துவார். இது அன்றைக்கு ஆச்சர்யப்பட வைத்தது. 80 வருடங்களுக்கு முன்பே இந்த தொழில்நுட்பத்தை மேனுவலாக சாதித்து காட்டியது தமிழ் சினிமா.
பின்னாளில் 'திருவிளையாடல்' படத்தில் 'பாட்டும் நானே பாவமும் நானே' பாடலில் சிவாஜி இப்படி நடித்திருப்பார். 'நவராத்திரி' படத்தில் 9 சிவாஜி ஒரே பிரேமில் வருவார்கள். ஜெகதலபிரதாபன் படத்தை எஸ்.எம்.ஸ்ரீமுலு நாயடு இயக்கினார். வி.கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்தார். பக்ஷிராஜா ஸ்டூடியோ தயாரித்திருந்தது.