பாலிவுட்டில் கவனம் செலுத்தும் ராஷி கண்ணா | பவிஷின் ‛லவ் ஓ லவ்' முதல்பார்வை வெளியீடு | ஒரே வாரத்தில் ஆயிரம் கோடி வசூல் செய்த துரந்தர் 2 | நேரடி ஓடிடி ரிலீஸ் : விஜய் சேதுபதி நடிக்கும் காட்டான் முதல் வரிசை கட்டும் புதுவரவுகள் | ஐஸ்வர்யா ராய் பார்த்து நடிக்க ஆசைப்பட்டேன்: அபிநயா | கோவாவில் செட்டில் ஆகிறாரா ரவிமோகன் | 'எல்ஐகே' படத்தால் மாறிய 'காளிதாஸ் 2, லீடர்' வெளியீடுகள் | தாய்லாந்து தீவில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா ஹனிமூன் | பிரசாந்த் நடிக்க வேண்டிய 'பூவே உனக்காக' : தேடிப் போன விஜய் அப்பா…! | 'பெத்தி' படப்பிடிப்பில் ராம்சரணுக்கு கண்ணில் காயம் பட்டதா ? படக்குழுவினர் விளக்கம் |

ஜேஷன் ஸ்டுடியோஸ், ஸ்ரீதியாகாரன் சினி புரொடக்ஷன் மற்றும் மை ஸ்டுடியோஸ் சார்பில் ஏ.எல்.உதயா, தயா என்.பன்னீர்செல்வம், எம்.தங்கவேல் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் படம் 'அக்யூஸ்ட்'. இப்படத்தை கன்னட இயக்குனர் பிரபு ஶ்ரீநிவாஸ் இயக்குகிறார். பிரபல கன்னட நடிகை ஜான்விகா நாயகியாக நடிக்கிறார். உதயா நாயகனாக நடிக்கிறார்.
முன்பெல்லாம் சென்னை சென்ட்ரலில் இருந்த மத்திய சிறையில் அடிக்கடி படப்பிடிப்பு நடக்கும். தற்போது அந்த சிறை இடிக்கப்பட்டுவிட்டதால் பெரும்பாலும் சிறைச்சாலை செட் அமைத்தே படமாக்கி வருகிறார்கள். புழல் சிறையில் பாதுகாப்பு கருதி சினிமா படப்பிடிப்புக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் இருப்பதால் அங்கு படப்பிடிப்பு நடத்துவதில் சிரமம் இருப்பதால் யாரும் செல்வதில்லை.
இந்த நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு புழல் மத்திய சிறையில் உரிய அனுமதி பெற்று 'அக்யூஸ்ட்' படத்தின் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. உதயா மற்றும் அஜ்மல், யோகி பாபு உள்ளிட்ட நடிகர்கள் இதில் பங்கேற்றனர். கடந்த மாதம் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு நிறைவடைந்தது. தற்போது சென்னைக்கு அருகே உள்ள குத்தம்பாக்கம் பகுதியில் படப்பிடிப்பு நடந்து வருகிறது.
குற்றம் சாட்டப்பட்ட அனைவருமே குற்றவாளிகள் அல்ல, சிஸ்டத்தில் ஏற்படும் பிழைகளால் நல்லவர்கள் கூட எப்படி பாதிப்படைகிறார்கள், தாதாவக உருவாகிறார்கள் என்பதை சொல்லும் படமாக உருவாகி வருகிறது. படத்திற்கு மருதநாயகம் ஒளிப்பதிவு செய்கிறார். நரேன் பாலகுமார் இசை அமைக்கிறார்.