கடவுள் பூமிக்கு வந்தால்… : சிம்புவின் 51வது பட அறிவிப்பு வெளியானது | லக்கி பாஸ்கரை அடுத்து 4 மொழிகளில் துல்கர் சல்மான் நடிக்கும் படம் | தொழிலதிபருடன் நிச்சயதார்த்தம்: பார்வதி நாயருக்கு விரைவில் 'டும்.. டும்.. டும்..' | பிரியங்கா சோப்ரா இல்லாமல் மகேஷ் பாபு படத்தின் படப்பிடிப்பை துவங்கிய ராஜமவுலி | கண்ணப்பா படத்தில் ருத்ராவாக பிரபாஸ் | சிவகார்த்திகேயனை இயக்கும் அஹமது | லிமிட் தாண்டினால் தடை: மகளுக்கு எச்சரிக்கை விடுத்த இயக்குனர் | பிளாஷ்பேக்: சவுராஷ்டிர மொழி சொற்கள் இடம்பெற்ற ஒரே தமிழ் திரையிசைப் பாடல் | இளையராஜா முன் அவரது பாடல்களுக்கு நடனமாடி வசீகரித்த ரஷ்ய கலைஞர்கள் | நடிகராக 50வது படம், தயாரிப்பாளராக மாறிய சிம்பு |
கமல் உடன் ‛தக் லைப்' படத்தில் நடித்து முடித்துள்ளார் சிம்பு. இப்படம் ஜூன் மாதம் திரைக்கு வருகிறது. சிம்பு இன்று(பிப்., 3) தனது 43வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதை முன்னிட்டு அவரின் புதிய பட அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாகி வருகின்றன. அந்தவகையில் இவரின் 49வது படத்தை 'பார்க்கிங்' இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குகிறார். இவரின் 50வது படத்தை தேசிங்கு பெரியசாமி இயக்குகிறார். இதற்கான அறிவிப்புகள் வெளியான நிலையில் சிம்புவின் 51வது பட அறிவிப்பும் வந்துள்ளது. இதனை ஓ மை கடவுளே படத்தை இயக்கிய அஸ்வத் மாரிமுத்து இயக்குகிறார். இதனை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்ட போஸ்டரில் ‛காட் ஆப் லவ்' என குறிப்பிட்டு சிம்புவின் போட்டோவையும் பகிர்ந்துள்ளனர். அதோடு சிம்பு வின்டேஜ் மோட் என தெரிவித்துள்ளனர். இதை வைத்து பார்க்கையில் சிம்புவின் பழைய படங்களின் ஸ்டைலில் ஒரு காதல் படமாக இருக்கும் என தெரிகிறது.
அதோடு, அஜித்தின் தீனா படத்தில் வரும் சொல்லாமல் தொட்டு செல்லும் பாடலில் வரும், ‛‛காதல் இருக்கும் பயத்தினில் தான் கடவுள் பூமிக்கு வருவதில்லை… மீறி அவன் பூமி வந்தால்…?'' என குறிப்பிட்டுள்ளனர். இதனால் சிம்பு கடவுள் ரோலில் நடித்தாலும் நடிக்கலாம் என தெரிகிறது.