ரிஷப் ஷெட்டி படத்தில் இருந்து விலகி விட்டேனா ? ஹனுமன் நடிகர் மறுப்பு | பிரபாஸிற்கு வில்லனாக நடிக்கும் ஈரானிய நடிகர் | சைரா நரசிம்ம ரெட்டி பட இயக்குனருடன் கைகோர்க்கும் பவன் கல்யாண் | பேவரைட் ஆஸ்திரேலிய நடிகையுடன் புத்தாண்டை கொண்டாடிய நதியா | நான் ஹிந்தியில் படம் இயக்கினால் இவர்தான் ஹீரோ : வினோத் | மீண்டும் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியதா ? நடிகர் ஜெயசூர்யா மறுப்பு | பராசக்தி படத்தை வெளியிட தடையில்லை : நீதிமன்றம் உத்தரவு | பத்து நாள் ராஜாவாக சதீஷ் | சிறிய படங்களின் பிரச்னைகள் தீருமா? | ஜனநாயகன் டிரைலர் நாளை(ஜன., 3) வெளியீடு |

தமிழ் சினிமாவில் பழைய படங்களின் டைட்டில்களை மீண்டும் பயன்படுத்துவது ஒரு 'பேஷன்' ஆக இருக்கிறது. ஏன் வேறு டைட்டில்கள் கிடைக்கவில்லையா என்று கேட்டால் அந்த டைட்டில்தான் எங்களது படத்திற்குப் பொருத்தமாக இருக்கிறது என்று சொல்வார்கள்.
பழைய படங்களின் டைட்டில்களைப் பயன்படுத்துவதில் சிவகார்த்திகேயன் இரண்டாவது இடத்தில் இருக்கிறார். பழைய பட டைட்டில்களில் இதுவரையில் “எதிர்நீச்சல், காக்கிசட்டை, வேலைக்காரன், மாவீரன், அமரன்” ஆகிய ஐந்து பட டைட்டில்கள் சிவகார்த்திகேயன் படங்களுக்கு வைக்கப்பட்டுள்ளது. தற்போது ஆறாவது படமாக 'பராசக்தி' டைட்டிலை வைத்திருக்கிறார்கள்.
பழைய படங்களின் டைட்டில்களைப் பயன்படுத்துவதில் தனுஷ் முதலிடத்தில் இருக்கிறார். “பொல்லாதவன், படிக்காதவன், உத்தமபுத்திரன், மாப்பிள்ளை, தங்கமகன், அசுரன், கர்ணன், மாறன், நானே வருவேன்” என ஒன்பது பழைய படங்களின் டைட்டில்கள் தனுஷ் படத்திற்கு வைக்கப்பட்டுள்ளது.
'பராசக்தி' டைட்டிலை மீண்டும் பயன்படுத்துவதற்கு பல சினிமா ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் தங்களது எதிர்ப்புகளைப் பதிவு செய்து வருகிறார்கள்.