நாங்க இருக்கிறோம், ஆதரவு கொடுக்கிறோம் : அஜித்தை பார்க்க செல்லும் திரைபிரபலங்கள் | ரீ ரிலீஸில் மோதும் விஜய், அஜித் | சூர்யாவுக்கு வைத்திருந்த 'இரும்புக் கை மாயாவி', கை மாறிவிட்டதா ? | துரந்தர் 2 ஒத்தி வைக்கப்படவில்லை : வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குனர் | பிரபாஸின் ஸ்பிரிட் பட ரிலீஸ் தேதி வெளியானது | ஜனவரி 23ல் ஓடிடியில் வெளியாகும் சிறை | கவலையில் கிர்த்தி ஷெட்டி, பிரார்த்தனா, நிதி அகர்வால், மாளவிகா மோகனன் | மெளனம் பேசியதே ரீ ரிலீஸ் ஆகிறது | அடுத்தடுத்து தனுஷ் மீது தொடரும் அவதூறுகள் | ஹீரோயின் விஷயத்தில் பிரதீப் ரங்கநாதன் கில்லாடி |

பனோரமிக் ஸ்டுடியோஸ் சார்பில் தமிழ், கன்னடம், தெலுங்கு மொழிகளில் உருவாகும் படம் 'ட்யூட்'. தேஜ் படத்தை இயக்கியுள்ளதுடன் நாயகனாகவும் நடித்திருக்கிறார். தமிழில் 'கொஞ்சம் வெயில் கொஞ்சம் மழை', 'காதலுக்கு மரணமில்லை', கன்னடத்தில் 'ரீவைண்ட்', மற்றும் 'ராமாச்சாரி 2.O' உள்ளிட்ட படங்களில் நடித்தவர் தேஜ்.
மேலும் இந்தப் படத்தில் ராகவேந்திரா ராஜ்குமார், சான்யா காவேரம்மா, மேகா, மோகினி, திரீத்தி, அனர்க்யா, தீபாலி பாண்டே, ஸ்ரீ, இவாஞ்சலின், சோனு தீர்த் கவுடா, யஷாஸ்வினி, மெர்ஸி, மோனிஷா, ராஜேஸ்வரி, சுந்தர்ராஜ், ஸ்பர்ஷா ரேகா மற்றும் விஜய் செந்தூர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பிரேம் ஒளிப்பதிவு செய்துள்ளார். எமில் முகமது இசையமைத்துள்ளார்.
படம் பற்றி தேஜ் கூறியதாவது : கால்பந்து விளையாட்டு பின்னணியில் ஒரு ஸ்போர்ட்ஸ் டிராமாவாக 'ட்யூட்' உருவாகி வருகிறது. குறிப்பாக கால்பந்து விளையாட்டில் மிகுந்த ஆர்வம் கொண்டவரான மறைந்த கன்னட சூப்பர் ஸ்டார் புனீத் ராஜ்குமாருக்கு அர்ப்பணிக்கும் விதமாக இந்த படம் தயாராகி வருகிறது. குறிப்பாக பெண்கள் கால்பந்து அணியும் படத்தில் இடம்பெறுகிறது. இதனால் ஏராளமான இளம் பெண்கள் இந்த படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமாகிறார்கள். 50 சதவீத படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. ஜூன் அல்லது ஜூலையில் படம் வெளியாகும் என்றார்.




