ஹீரோ ஆனார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் | ‛சக்தி திருமகன்' முதல் ‛ஓஜி' வரை : இந்த வார ஓடிடி ஸ்பெஷல்....! | 'பைசன்' படத்தை பாராட்டிய பா.ஜ.,வின் முன்னாள் தலைவர் அண்ணாமலை! | ஹாட்ரிக் ரூ.100 கோடி வசூலை தந்த பிரதீப் ரங்கநாதன் | அக்டோபர் 31ல் நெட் பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் தனுஷின் இட்லி கடை! | 5 நிமிட நடனத்திற்கு ஐந்து கோடி சம்பளம் வாங்கும் பூஜா ஹெக்டே! | கருத்த மச்சான் பாடலுக்கு மமிதா பைஜூ அசத்தல் நடனம் ! வைரலாகும் வீடியோ!! | கிண்டல் செய்த ரசிகருக்கு பதிலடி கொடுத்த சூரி | 'பராசக்தி' பாடல்கள் விரைவில்… ஜிவி பிரகாஷ் தகவல் | கதை நாயகியான கீதா கைலாசம் |
கன்னட சினிமாவின் முன்னணி நடிகர் கிச்சா சுதீப். சமீபத்தில் அவர் நடிப்பில் வெளிவந்த 'மேக்ஸ்' படம் வசூலை குவித்தது. தமிழிலும் நான் ஈ, புலி, பாகுபலி, முடிஞ்சா இவன புடி போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் 2019ம் ஆண்டு சுதீப் நடித்த 'பயில்வான்' படத்திற்காக சிறந்த நடிகருக்கான மாநில விருது சுதீப்பிற்கு வழங்கப்படும் என்று கர்நாடக அரசு அறிவித்திருந்தது. ஆனால் இந்த விருதை சுதீப் நிராகரித்துள்ளார்.
இதுதொடர்பாக தனது எக்ஸ் தளப்பக்கத்தில் அவர் எழுதியிருப்பதாவது: மரியாதைக்குரிய கர்நாடக அரசு மற்றும் நடுவர் மன்ற உறுப்பினர்களே, சிறந்த நடிகர் பிரிவின் கீழ் மாநில விருதைப் பெற்றிருப்பது பாக்கியம். இந்த கவுரவத்திற்காக நடுவர் மன்றத்திற்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இருப்பினும், பல ஆண்டுகளாக விருதுகளைப் பெறுவதை எனது தனிப்பட்ட காரணங்களுக்காக தவிர்த்து வருகிறேன்.
இந்தக் கலைக்கு உயிர் கொடுத்த பல தகுதியான நடிகர்கள் உள்ளனர். அவர்கள் இந்த விருதுக்கு என்னை விட அதிக தகுதியானவர்களில் ஒருவர் இந்த விருதைப் பெற்றால் மகிழ்ச்சியடைவேன். விருதுகளைப் பொருட்படுத்தாமல், முழு மனதுடன் அனைவரையும் மகிழ்விக்க விரும்புகிறேன். நடுவர் குழுவின் இந்த அங்கீகாரம் எனக்கு ஊக்கமாக அமைந்துள்ளது.
இந்த அங்கீகாரம் எனது வெகுமதி என்பதால், என்னைத் தேர்ந்தெடுத்ததற்காக ஒவ்வொரு நடுவர் மன்ற உறுப்பினருக்கும் நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். எனது முடிவால் ஏற்பட்ட ஏமாற்றத்திற்கு நடுவர் மன்ற உறுப்பினர்களிடமும் மாநில அரசிடமும் நான் மனதார மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். நீங்கள் எனது முடிவை மதித்து, நான் தேர்ந்தெடுத்த பாதையில் என்னை ஆதரிப்பீர்கள் என்று நம்புகிறேன்.
எனது பணியை அங்கீகரித்து இந்த விருதுக்கு என்னைப் பரிசீலித்ததற்காக, நடுவர் மன்ற உறுப்பினர்களுக்கும், மாநில அரசுக்கும் மீண்டும் ஒருமுறை நன்றி கூறுகிறேன். எனக் குறிப்பிட்டுள்ளார். சுதீபின் இந்த பதிவு கர்நாடக திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா உள்ளிட்ட பல காரணங்களால் திரைப்பட விருதுகளை நிறுத்தி வைத்திருந்த கர்நாடக அரசு தற்போது அதனை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.