சமந்தாவுக்கு விலை உயர்ந்த திருமண பரிசு கொடுத்த ராஜ் நிடிமொரு | ‛கோழிப்பண்ணை செல்லத்துரை' நாயகனின் அடுத்த படம் ‛ஹைக்கூ' | அஜித்தின் கார் ரேஸை ஆவண படமாக்கும் ஏ.எல்.விஜய் | லண்டன் லெஸ்டர் சதுக்கத்தில் ஷாருக்கான், கஜோலுக்கு சிலை | ரஜினி படத்திற்கு இசையமைக்கும் சாய் அபயன்கர் | ரவி தேஜா,பிரியா பவானி சங்கர் படத்தின் தலைப்பு இருமுடி? | பராசக்தி படத்தின் இசை வெளியீட்டு விழா எங்கே? | அரசன் படத்தின் படப்பிடிப்பு பற்றிய புதிய அப்டேட் | பாலகிருஷ்ணாவின் 'அகண்டா 2' தள்ளிப் போனது ஏன் ? | 100 கோடி வசூல் கடந்த தனுஷின் 'தேரே இஷ்க் மெய்ன்' |

பாலிவுட்டின் பிரபல நடிகர் சைப் அலிகானை கத்தியால் குத்திய நபரை போலீசார் கைது செய்தனர்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மன்சூர் அலிகான் பட்டோடி - நடிகை ஷர்மிளா தாகூரின் மகன் சைப் அலிகான். இவர் ஏராளமான ஹிந்தி திரைப்படங்களில் நடித்து பிரபலமானார். நடிகை கரீனா கபூரை மணந்த இவர் மஹாராஷ்டிராவின் மும்பையில், பணக்காரர்கள் அதிகம் வசிக்கும் பாந்த்ராவில், 'சத்குரு ஷரண்' என்ற அடுக்குமாடி குடியிருப்பில் 12வது மாடியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
சைப் அலிகான் வீட்டுக்குள் நள்ளிரவில் நுழைந்த கொள்ளையன் அவரை, ஆறு முறை கத்தியால் குத்தியதில் ரத்த வெள்ளத்தில் சரிந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
சைப் அலிகான் வீட்டு பணிப்பெண் ஆயா எலியாமா பிலிப் கூறியதாவது : குளியலறையில் ஒரு நபர் மறைந்து இருப்பதை பார்த்தேன். யார் என்பதை பார்க்க விரைந்து வந்தேன். அந்த நபர் சைப் அலிகான் மகன் ஜெயின் அறைக்குள் வந்தார். நான் சத்தமிட்டதும் என்னை பிளேடால் தாக்கினர். என் மணிக்கட்டில் காயம் ஏற்பட்டது. நான் அவரிடம் என்ன வேண்டும் என்று கேட்டேன். அவர் ரூ.1 கோடி வேண்டும் என்று மிரட்டினார் என்றார். மற்றொரு வீட்டு, உதவியாளரும் அங்கு வந்ததால், அந்த மர்ம நபர் தப்பி ஓட்டம் பிடித்தார். இது தொடர்பான காட்சிகள் அங்கிருந்த சி.சி.டி.வி.,யில் பதிவாகியது.
கைது
சைப் அலிகானை வீடு புகுந்து கத்தியால் குத்தியவரை இன்று (ஜன.,17) போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நபரை பாந்த்ரா போலீஸ் ஸ்டேஷனில் வைத்து, போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர்.