ஹரிஷ் கல்யாணுக்காக பாடியுள்ள சிம்பு! | வெப் தொடருக்காக ஒன்றிணையும் மாதவன், துல்கர் சல்மான், கவுதம் கார்த்திக்! | தனுஷின் அடுத்த ஹிந்தி படத்தின் படப்பிடிப்பு துவங்கியது! | ஜனநாயகன் பட தயாரிப்பாளர் உடன் கைகோர்க்கும் போர் தொழில் பட இயக்குனர்! | ஆறு மாதத்திற்கு முன்பே சம்பளம் தந்த கமலுக்கு நன்றி சொன்ன சிவகார்த்திகேயன் | ரூ. 25 கோடி வசூலைக் எட்டிய குடும்பஸ்தன் படம்! | தனுஷ், தமிழரசன் பச்சமுத்து படத்திற்கு இசையமைக்கும் அனிருத்! | ‛‛எந்த விபத்தும் ஏற்படவில்லை, நலமுடன் இருக்கிறேன்'' - நடிகர் யோகி பாபு விளக்கம் | சினேகனின் குழந்தைகளுக்கு பெயர்சூட்டிய கமல்ஹாசன் | 5 வருட காதலை வெளிப்படையாக அறிவித்த அருண் - அர்ச்சனா |
பாலிவுட்டின் பிரபல நடிகை திஷா பதானி. தமிழில் சிவா இயக்கத்தில் சூர்யா நடித்து திரைக்கு வந்த கங்குவா படத்தில் நாயகியாக நடித்தார். பிறமொழி படங்களிலும் பிசியாக நடித்து வரும் இவர், தற்போது டுராங்கோ என்ற அமெரிக்க ஆன்லைன் தொடரில் நடித்து வருகிறார். மெக்சிகோவில் இந்த வெப் தொடரின் படப்பிடிப்பு நடைபெற்று வரும் செட்டில், ஹாலிவுட் நடிகர்களுடன் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இணையதளத்தில் வெளியாகியுள்ளது. இந்த வெப் தொடர் மூலம் ஹாலிவுட்டில் அறிமுகமாகிறார் திஷா பதானி. ஏற்கனவே பாலிவுட் நடிகைகள் ஐஸ்வர்யா ராய், பிரியங்கா சோப்ரா, தீபிகா படுகோனே உள்ளிட்ட பலரும் ஹாலிவுட் வெப் சீரிஸ்களில் நடித்து வரும் நிலையில் தற்போது திஷா பதானியும் அந்த பட்டியலில் இணைந்துள்ளார்.