அர்ஜுன் தாஸ் ஜோடியாக மமிதா பைஜூ? | திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் ரம்யா பாண்டியனுக்கு கிடைத்த பவர் | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | விஜய் சேதுபதியை இயக்கும் துரை செந்தில்குமார் | படையப்பா... ஜெயிலர் 2... ரம்யா கிருஷ்ணன் பகிர்ந்து சுவாரஸ்யம் | அடுத்த படத்திற்காக கதை கேட்கும் பவிஷ் | வாடிவாசல் படப்பிடிப்பில் ஏற்பட்ட திடீர் மாற்றம் | அல்லு அர்ஜுன், அட்லி படம் : கதாநாயகிகள் வாய்ப்பு யாருக்கு? | ஒரு பாட்டாவது வைத்திருக்கலாம்…. த்ரிஷா, சிம்ரன் ரசிகர்கள் வருத்தம் | 2025ல் இரண்டாவது 50 நாள் படம் 'டிராகன்' |
மணிரத்னம், கமல்ஹாசன் கூட்டணியில் நீண்ட வருடங்களுக்கு பிறகு உருவாகி வரும் திரைப்படம் 'தக் லைப்'. இதில் சிலம்பரசன், அசோக் செல்வன், திரிஷா, ஜோஜூ ஜார்ஜ், ஐஸ்வர்யா லஷ்மி உள்ளிட்ட பல முன்னனி நட்சத்திரங்கள் இணைந்து முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ரெட் ஜெயண்ட் மூவிஸ், ராஜ்கமல் நிறுவனம், மெட்ராஸ் டாக்கீஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர். இதற்கு ஏ. ஆர். ரஹ்மான் இசையமைக்கின்றார்.
தற்போது இந்த படத்தின் பிஸ்னஸ் பணிகளை துவங்கியுள்ளனர். முதற்கட்டமாக இந்த படத்தின் ஆந்திரா மற்றும் தெலுங்கானா தியேட்டர் உரிமையை ஸ்ரீசாத் மூவிஸ் மூலம் சுதாகர் ரெட்டி என்பவர் ரூ.20 கோடிக்கு கைப்பற்றியுள்ளதாக கூறப்படுகிறது. இதுவரை வெளிவந்த கமல் படங்களின் ஆந்திரா, தெலுங்கானா பிஸ்னஸை விட தக் லைப் பிஸ்னஸ் அதிகம் என்கிறார்கள்.