மோசமான தோல்வியை சந்தித்த 'ஏக் தின்' | 'கருப்பு' ரிலீஸ் சிக்கலா? முன்பதிவு டல்லா? | லோகேஷ் கனகராஜ் - அல்லு அர்ஜுன் படத்தில் பூஜா ஹெக்டே! | 'ஜனநாயகன்' பட ஓடிடி உரிமையை கைப்பற்ற போட்டி போடும் நிறுவனங்கள்! | நெல்சனால் தள்ளிப்போகும் 'ஜெயிலர் 2' படம்! | ஆகஸ்ட் மாதத்தை குறிவைத்த சூரியின் 'மண்டாடி' | அதிகாலை காட்சிக்கு அனுமதி மறுப்பைத் தொடரும் விஜய் அரசு | நீதி கிடைக்க வேண்டும்; இசையமைப்பாளர் மீது குற்றம்சாட்டிய ஸ்வாகதா பதிவு | 'கருப்பு' வியாபாரம், கசிந்த தகவல்… | சட்டசபையில் சனாதனம் பற்றிய உதயநிதியின் பேச்சு: நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் பதிலடி |

1970, 80களில் பக்தி படங்கள் ஓடிய தியேட்டர்களில் பெண்கள் அருள் வந்து சாமியடியது நடந்தது . பிற்காலத்தில் அதுவே விளம்பரங்களுக்காக செயற்கையாகவும் நடத்தப்பட்டது. இதற்கு முன்னோடியாக 'என் மனைவி' என்ற படத்தில் இது போன்ற நிகழ்வு நடந்து. இத்தனைக்கும் இந்தப் படம் பக்தி படம் அல்ல. கணவன், மனைவிக்கு இடையிலான பிரச்னைகளை கொண்ட காமெடிப் படம்.
இந்த படத்தின் கதை களம் மயிலாப்பூர். மயிலாப்பூர் கோவிலுக்கு அருகில் உள்ள ஒரு வீட்டில் கதை நடப்பதாக உருவாகி இருந்தது. இந்த படம் ஸ்டூடியோவில் எடுக்கப்பட்டாலும் மயிலாப்பூர் பின்னணியை காட்டுவதற்காக கோவிலுக்கு அருகில் உள்ள ஒரு வீட்டின் மொட்டை மாடியில் படமாக்கப்பட்டது. அந்த காட்சிகளில் அப்போது கபாலீஸ்வரர் கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடந்து ராஜகோபுரம் புதுப்பொலிவுடன் காணப்பட்ட ராஜ கோபுர காட்சியும், கோவில் திருவிழா காட்சியும், கபாலீஸ்வரரின் உற்சவ மூர்த்தியும் அடிக்கடி காட்டப்பட்டது.
இந்த காட்சிகளின் போது ரசிகர்கள் அமர்ந்து படத்தை பார்க்காமல் எழுந்து நின்று பார்த்ததோடு, கைகளை தலைக்குமேல் உயர்த்தி வணங்கவும் செய்தார்கள். அப்போது இது பரபப்பான செய்தி ஆனது.
இந்தப் படத்தை சுதந்தர் ராவ் நட்கர்னி இயக்கி இருந்தார். கே.சாரங்கபாணி, கே.மகாதேவன், எம்.கே.மீனலோசினி, கே.ஆர்.செல்லம் ஆகியோர் நடித்திருந்தார்கள். ஏவிஎம் நிறுவனம் தயாரித்திருந்தது. 1942ல் வெளிவந்தது.