விடாமுயற்சி படத்திற்கு ஒரு நாள் மட்டும் சிறப்பு காட்சிக்கு அனுமதி | ''கேரவனில் நடந்த சம்பவம்...'': மனமுடைந்த நிகழ்வை பகிர்ந்த தமன்னா | ரிலீசுக்கு தயாராகும் டேனியல் பாலாஜியின் கடைசி படம் | கதை நாயகன் ஆனார் ராமர் | 'விடாமுயற்சி'யில் ஒரு வாரத்தில் எனது கேரக்டரை மாற்றினார் இயக்குனர் : ரெஜினா | ஒத்த ஓட்டு முத்தையாவை வெற்றி பெற வைப்பது உங்கள் கடமை: கவுண்டமணி | பிளாஷ்பேக் : கங்கை அமரன் இசை சாம்ராஜ்யம் நடத்திய 'வாழ்வே மாயம்' | கும்பமேளாவில் புனித நீராடிய சம்யுக்தா, ஸ்ரீநிதி ஷெட்டி | பிளாஷ்பேக் : புஷ்பலதா, ஏவி.எம்.ராஜன் கிறிஸ்தவ போதகர்கள் ஆனது எப்படி? | பிளாஷ்பேக்: மேடை நாடகத்தில் வெற்றி பெற்று வெள்ளித்திரையில் தோற்றுப் போன “டம்பாச்சாரி” |
பாலிவுட் நடிகர் அமீர் கானின் மகன் ஜூனைத் கான் தற்போது லவ் டூடே படத்தின் ஹிந்தி ரீமேக்கான 'லவ்யப்பா' எனும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை அத்வைத் சன்தன் இயக்குகிறார். இதில் கதாநாயகியாக மறைந்த நடிகை ஸ்ரீ தேவியின் இளைய மகள் குஷி கபூர் நடித்துள்ளார்.
இந்த படத்தை பார்த்த அமீர்கான் கூறியதாவது, "எனக்கு லவ்யப்பா படம் மிகவும் பிடித்திருந்தது. மொபைல் போன்களால் இன்று நம் வாழ்க்கை மாறிய விதம் பற்றி நன்றாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. நான் ஸ்ரீதேவியின் மிகப்பெரிய ரசிகன். இந்த படத்தின் மூலம் ஸ்ரீதேவியை குஷி கபூரிடம் பார்த்தேன்" என தெரிவித்தார்.