'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
'திருநெல்வேலி' படம் மூலம் 2000ம் ஆண்டில் திரையுலகில் அடியெடுத்து வைத்த நடிகர் உதயா. இயக்குனர் ஏ.எல்.விஜய்யின் தம்பி. சினிமாவில் அறிமுகமாகி 25 ஆண்டுகள் ஆனதை தொடர்ந்து தற்போது அவர் 'அக்யூஸ்ட்' என்ற படத்தில் அஜ்மல் மற்றும் யோகி பாபுவுடன் இணைந்து நடிக்கிறார்.
உதயா, தயா என். பன்னீர்செல்வம், எம். தங்கவேல் ஆகியோர் தயாரிக்கும் இப்படத்தை கன்னட இயக்குனர், பிரபு ஶ்ரீநிவாஸ் இயக்குகிறார். கன்னட நடிகை ஜான்விகா இந்த படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். மருதநாயகம் ஒளிப்பதிவு செய்ய நரேன் பாலகுமார் இசை அமைக்கிறார்.
படம் பற்றி இயக்குனர் பிரபு ஸ்ரீநிவாஸ் கூறியதாவது: குற்றம் சாட்டப்பட்ட அனைவருமே குற்றவாளிகள் அல்ல, சிஸ்டத்தில் ஏற்படும் பிழைகளால் நல்லவர்கள் கூட எப்படி பாதிப்படைகிறார்கள், தாதாவாக உருவாகிறார்கள் என்பதை விறுவிறுப்பாக சொல்லும் படம். திரைப்படத்தில் இதுவரை ஏற்றிராத முற்றிலும் மாறுபட்ட வேடத்தில் உதயா நடிக்கிறார். அவருடன் முதல் முறையாக அஜ்மல் மற்றும் யோகி பாபு இணைந்துள்ளனர். கோடை காலத்தில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளோம். என்றார்.