ரெட்ரோ படத்தின் தணிக்கை மற்றும் நீளம் குறித்து தகவல் இதோ! | ஆன் ஸ்க்ரீன் என்னோட குரு கமல்ஹாசன் - சிலம்பரசன் பேச்சு | பொன்னியின் செல்வன் : தயாரிக்க மறுத்த கமல்ஹாசன் | தனுசுடன் 'குபேரா' புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்க தயாராகி வரும் ராஷ்மிகா மந்தனா! | 20 கிலோ வெயிட் குறைத்த புகைப்படங்களை வெளியிட்ட நடிகை குஷ்பு! | சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் நடிக்கும் ராம் சரண் | விஜய் சினிமாவை விட்டு செல்லக் கூடாது : இயக்குனர் மிஷ்கின் வேண்டுகோள் | இருமுடி கட்டி சபரிமலை சென்ற நடிகர்கள் கார்த்தி, ரவி மோகன் | வீர தீர சூரன் 2 : அடுத்த வாரம் ஓடிடி ரிலீஸ் | ஆங்கிலத்தில் பேசச் சொன்ன தொகுப்பாளர் : தமிழில்தான் பேசுவேன் என்ற அபிராமி |
அபிஷேக் பிக்சர்ஸ், நிக் ஸ்டூடியோ இணைந்து தயாரிக்கும் பான் இந்தியா படம் 'நாகபந்தம்'. இதில் விராட் கர்ணா நாயகனாக நடிக்கிறார், நபா நடேஷ் மற்றும் ஐஸ்வர்யா மேனன் நாயகிகளாக நடிக்கிறார்கள். ஜெகபதி பாபு, ஜெயபிரகாஷ், முரளி சர்மா, பி.எஸ்.அவினாஷ் மற்றும் பலர் நடிக்கிறார்கள். அபிஷேக் நாமா இயக்குகிறார். அபே இசை அமைக்கிறார். சவுந்தர்ராஜன் ஒளிப்பதிவு செய்கிறார்.
பத்மநாபசுவாமி மற்றும் பூரி ஜகந்நாதர் கோயில்களில் மறைந்துள்ள, பொக்கிஷங்களின் சமீபத்திய கண்டுபிடிப்புகளின் உத்வேகத்தில், ஆன்மீக மற்றும் சாகசக் கருப்பொருள்களுடன், ஸ்கிரிப்டை அபிஷேக் நாமா எழுதியுள்ளார். நாகபந்தம் இந்தியாவில் உள்ள 108 விஷ்ணு கோயில்களைச் சுற்றியுள்ள மர்மத்தை ஆராய்கிறது, இந்த புனித தளங்களைப் பாதுகாக்கும் நாகபந்தத்தின் பண்டைய சடங்குகளை மையமாகக் கொண்டு, இக்கதை உருவாக்கப்பட்டுள்ளது. 108 விஷ்ணு கோவில்களிலும் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டிருக்கிறார்கள். படத்தின் பட்ஜெட் 100 கோடி என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
108 விஷ்ணு கோவில்களில் உள்ள நாகங்களை ஒருங்கிணைத்தால் உலகையே அதிசயிக்கவைக்கும் ஒரு புதையல் ரகசியம் கிடைக்கும் என்பதுதான் படத்தின் ஒன் லைன். அதை ஹீரோ எப்படி கண்டுபிடிக்கிறார் என்பது திரைக்கதை.