அமிதாப்பச்சன் வீட்டில் தங்க கழிப்பறையா : பரபரப்பு கிளப்பிய பாலிவுட் நடிகர் | அமைச்சர் வாக்குறுதி ; வேலை நிறுத்தத்தை கைவிட்ட மலையாள திரையுலகம் | ஊர்வசியின் சகோதரர் நடிகர் கமல் ராய் காலமானார் | பிளாஷ்பேக் : இளவரசு நடிகரானது இப்படித்தான் | பிளாஷ்பேக் : எம்ஜிஆரை காப்பாற்றிய நடன இயக்குனர் | கோட்டயத்தில் நடந்த உண்மை சம்பவம்: தலைவர் தம்பி தலைமையில் இயக்குனர் பேட்டி | உடற்கேலி : ஈஷா ரெப்பா வருத்தம் | பாரத், சான்வீயின் புதிய பட படப்பிடிப்பு துவங்கியது | சிரஞ்சீவி படத்தில் நடிக்க இளம் நடிகைகளிடம் பேச்சுவார்த்தை | இம்மார்ட்டல் படம் குறித்து பகிர்ந்த இயக்குனர் |

ரஜினி நடிப்பில் சிவாஜி, எந்திரன், 2.0 போன்ற படங்களை இயக்கியவர் ஷங்கர். தற்போது ராம்சரண் நடிப்பில் 'கேம் சேஞ்சர்' என்ற படத்தை இயக்கி உள்ளார். அப்படம் வருகிற 10ம் தேதி திரைக்கு வர உள்ளது. இந்த நிலையில் இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இயக்குனர் ஷங்கரிடத்தில் மீண்டும் ரஜினியை வைத்து எப்போது படம் இயக்குவீர்கள்? என்று மீடியாக்கள் ஒரு கேள்வி கேட்டனர்.
அதற்கு, ''ரஜினிக்கு பொருத்தமான கதைகள் அமையும்போது கண்டிப்பாக மீண்டும் அவரை வைத்து படம் இயக்குவேன்'' என்று தெரிவித்திருக்கிறார். அதனால் கேம் சேஞ்சர் படத்தை அடுத்து இந்தியன்- 3 மற்றும் வேள்பாரி பட வேலைகளில் இறங்கும் ஷங்கர், அந்த படங்களுக்கு பிறகு கூட மீண்டும் ரஜினியுடன் இணைவதற்கு வாய்ப்பு இருப்பதாக தெரியவந்துள்ளது.