2025 கூகுள் சர்ச் : 3வது இடத்தில் 'கூலி' | வா வாத்தியார் படத்தின் டிரைலர் வெளியானது | மலேசியாவில் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்த அஜித் | ஜனநாயகன் படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் | டிசம்பர் 9 முதல் 'அரசன்' படப்பிடிப்பு : சிம்பு கொடுத்த தகவல் | ஜி.வி.பிரகாஷின் அடுத்த படம் ஹேப்பிராஜ் | கடந்த சில வாரங்களாக காற்று வாங்கும் தமிழ் சினிமா | புதுமுகங்களின் மாயபிம்பம் | மீண்டும் நாயகியாக நடிக்கும் ரக்சிதா | அவதார் புரமோசன் நிகழ்வில் அர்னால்ட் |

இயக்குனர் பேரரசு தமிழில் 'திருப்பாச்சி, சிவகாசி, திருப்பதி, பழனி' உள்ளிட்ட பல மசாலா கமர்ஷியல் படங்களை இயக்கியவர். சமீபத்தில் பேரரசு இயக்கத்தில் வெளிவந்த படங்கள் தொடர் தோல்வியை தழுவியதால் படங்களை இயக்காமல் இருந்தார்.
தற்போது பேரரசு அளித்த பேட்டி ஒன்றில், திருப்பதி தலைப்பு குறித்து சுவாரஸ்யமான தகவலை பகிர்ந்துள்ளார். அதன்படி, "திருப்பதி படத்திற்கு முதலாக வைத்திருந்த தலைப்பு 'வெள்ளையன்'. ஆனால், அதற்கு முன்பு என் இயக்கத்தில் வெளிவந்த திருப்பாச்சி, சிவகாசி என ஊர் பெயர்கள் வைத்து வெளியாகி வெற்றி பெற்றதால் ஏ.வி.எம். சரவணன், ஊர் பெயரில் தலைப்பு வைத்தால் தான் உங்க ஸ்டைல் படமாக இருக்கும் என்றார். அதன் பிறகு தான் திருப்பதி என தலைப்பு வைத்தேன். அந்த படமும் ஹிட்டானதால் பேரரசு ஊரரசு ஆகி விட்டேன்" என தெரிவித்துள்ளார்.