கதை நாயகியான கீதா கைலாசம் | திரவுபதி 2: ரிச்சர்ட்சின் 'வீர சிம்ஹா கடவராயன்' தோற்றம் வெளியீடு | இளம் வயது தோற்றத்தில் கிஷோர் | சினிமாவில் 20 ஆண்டுகள்: பயணம் முடியவில்லை என்கிறார் ரெஜினா | அடுத்த பட அறிவிப்பில் தாமதிக்கும் அஜித், விக்ரம், சிவகார்த்திகேயன் | இரண்டு மாத 'வசூல் வறட்சி'யை சமாளித்த 'பைசன், டியூட்' | இசையமைப்பாளர் சபேஷ் காலமானார் | மனோரமாவின் மகன் பூபதி காலமானார் | பிளாஷ்பேக்: ஒரே படத்தில் 3 மொழிகளில் ஹீரோயினாக நடித்த வைஜயந்திமாலா | பிளாஷ்பேக்: அருணாச்சலம் முன்னோடி 'பணம் படுத்தும் பாடு' |
எஸ் தானு தயாரிப்பில் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகும் படம் 'வாடிவாசல்' என கடந்த சில வருடங்களுக்கு முன்பு அறிவித்தனர். செல்லப்பாவின் 'வாடிவாசல்' நாவலை மையப்படுத்தி இப்படம் உருவாக உள்ளது. இந்த படத்தை அறிவித்த பிறகு வெற்றிமாறன் விடுதலை 1,2 படங்களை இயக்கியுள்ளார். கடந்த சில மாதங்களாக வாடிவாசல் படத்தின் முன் தயாரிப்பு பணிகளும், சில தொழில்நுட்ப காட்சிகள் சம்மந்தப்பட்ட பணிகளும் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் வாடிவாசல் படத்தின் படப்பிடிப்பை 2025ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் துவங்கவுள்ளனர். மேலும், வாடிவாசல் படத்தை மூன்று பாகங்களாக உருவாக்க வெற்றிமாறன் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.