ஹீரோ ஆனார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் | ‛சக்தி திருமகன்' முதல் ‛ஓஜி' வரை : இந்த வார ஓடிடி ஸ்பெஷல்....! | 'பைசன்' படத்தை பாராட்டிய பா.ஜ.,வின் முன்னாள் தலைவர் அண்ணாமலை! | ஹாட்ரிக் ரூ.100 கோடி வசூலை தந்த பிரதீப் ரங்கநாதன் | அக்டோபர் 31ல் நெட் பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் தனுஷின் இட்லி கடை! | 5 நிமிட நடனத்திற்கு ஐந்து கோடி சம்பளம் வாங்கும் பூஜா ஹெக்டே! | கருத்த மச்சான் பாடலுக்கு மமிதா பைஜூ அசத்தல் நடனம் ! வைரலாகும் வீடியோ!! | கிண்டல் செய்த ரசிகருக்கு பதிலடி கொடுத்த சூரி | 'பராசக்தி' பாடல்கள் விரைவில்… ஜிவி பிரகாஷ் தகவல் | கதை நாயகியான கீதா கைலாசம் |
2024ம் ஆண்டைப் பொறுத்தவரையில் சூப்பர் ஹிட்டான பாடல்கள் அதிகம் வரவில்லை. ஒரு சில பாடல்கள் மட்டுமே சூப்பர் ஹிட்டாகி 100 மில்லியன் பார்வைகளை யு டியுபில் கடந்தன.
ஆனால், இந்த 2025ம் ஆண்டின் ஆரம்பமே தமிழ் சினிமா இசையயைப் பொறுத்தவரையில் அமர்க்களமாக ஆரம்பமாகிறது. இந்த வருட பொங்கலை முன்னிட்டு ஜனவரி 10 மற்றும் ஜனவரி 14 ஆகிய தேதிகளில் சில முன்னணி இசையமைப்பாளர்களின் படங்கள் வெளியாக உள்ளன.
இளையராஜா இசையமைத்துள்ள 'படைத் தலைவன்', ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ள 'காதலிக்க நேரமில்லை', யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள 'நேசிப்பாயா', ஜிவி பிரகாஷ்குமார் இசையமைத்துள்ள 'வணங்கான்', இமான் இசையமைத்துள்ள '2 கே லவ் ஸ்டோரி', சாம் சிஎஸ் இசையமைத்துள்ள 'மெட்ராஸ்காரன்', உள்ளிட்ட முன்னணி இசையமைப்பாளர்களின் படங்கள் வெளியாகின்றன.
வருடத்தின் ஆரம்பத்திலேயே இப்படியான ஒரு இசை போட்டியுடன் படங்கள் வருவது ஆச்சரியமானது.