பவதாரிணிக்கு இசை அஞ்சலி செலுத்திய ஷாலினி | அருள்நிதிக்கு ஜோடியாகும் தன்யா ரவிச்சந்திரன்! | தரைமட்டமானது சென்னை அடையாளங்களில் ஒன்றான உதயம் தியேட்டர் | வலைதளங்களில் வைரலான அஜித்தின் லேட்டஸ்ட் வீடியோ | பழசை மறக்காத சூரி | ஹேக் செய்யப்பட்ட திரிஷாவின் எக்ஸ் கணக்கு | இரண்டு பாகங்களாக உருவாகும் கார்த்தியின் 29வது படம்! | ஆண் குழந்தை தான் வாரிசுக்கு அடையாளமா... சிரஞ்சீவி பேச்சால் சர்ச்சை | 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' இசை வெளியீட்டு விழாவை தனுஷ் புறக்கணித்தது ஏன்? | நான் காப்பி ரைட்ஸ் கேட்க மாட்டேன் - இசையமைப்பாளர் தேவா |
சமீபத்தில் ஒரு பாலிவுட் சேனலுக்காக தயாரிப்பாளர்கள் போனி கபூர், நாகவம்சி மற்றும் தயாரிப்பாளரும் நடிகருமான சித்தார்த் ஆகியோர் பங்குபெற்ற ஒரு விவாதம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் போனி கபூர் பேசும்போது, “பாலிவுட்டை பொறுத்தவரை ஒரு புதுமுகமாக வந்த கமல்ஹாசன் 'ஏக் துஜே கேலியே' படத்தின் மூலம் மிகப்பெரிய நடிகராக இங்கே அந்தஸ்து பெற்றார். இத்தனைக்கும் ஒரு தென்னிந்திய இயக்குனரான பாலச்சந்தர் தான் அந்த படத்தை இங்கே இயக்கியிருந்தார்” எனக் கூறினார்.
அப்போது இடைமறித்த சித்தார்த், “அதே சூழ்நிலை இப்போது இருக்கிறது என்கிறீர்களா?” என்று கேட்டார். அதற்கு போனி கபூர், “ஏன் இல்லை ? இதோ இப்போது ஜூனியர் என்டிஆர், ஆதித்யா ராய் கபூரின் 'வார் 2' படத்தில் அறிமுகமாகி நடித்து வருகிறாரே” என்று கூறினார். உடனே தயாரிப்பாளர் நாகவம்சி, “ஜூனியர் என்டிஆர் ஒன்றும் புதுமுகம் அல்ல” என்று உடனே பதில் கொடுத்தார்.
அதைத்தொடர்ந்து சித்தார்த்தும் போனி கபூரிடம், “நீங்கள் யாரைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறீர்கள் தெரியுமா? இந்திய சினிமாவில் உள்ள மிகப்பெரிய சூப்பர் ஸ்டார்களில் ஒருவரும் மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனங்களின் படங்களில் நடித்து வருபவருமான ஒருவரை பற்றி தான் பேசிக் கொண்டிருக்கிறீர்கள்” என்று கூறினார்.
அதாவது ஜூனியர் என்டிஆர் பாலிவுட்டுக்கு புதுமுகம் அல்ல, ஏற்கனவே தெரிந்த முகம் தான் என்றும், ஆனால் ஒரு சாதாரண தென்னிந்திய நடிகருக்கு பாலிவுட்டில் நுழைந்து இப்போது ஜெயிக்க முடியுமா என்கிற கேள்வி தான் சித்தார்த் கேட்டது. அது இப்படி சூடான விவாதமாக மாறி பின்னர் அப்படியே வேறு பக்கம் திரும்பி விட்டது.