தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? | சர்வர் வேலை சாதாரணமானது இல்லை : இயக்குனர் கே.பாக்யராஜ் சொன்ன கதை | நயன்தாரா பிறந்தநாளுக்கு ரோல்ஸ் ராய்ஸ் கார் பரிசளித்த விக்னேஷ் சிவன் | பிளாஷ்பேக்: நட்பின் ஆழம் பேசிய “எங்கள் தங்கம்” படப் பாடல்கள் |

தமிழ் சினிமாவில் சில்க் ஸ்மிதா, படாபட் ஜெயலட்சுமி, ஷோபா உள்ளிட்ட பல நடிகைகள் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் நடிகர்கள் தற்கொலை என்பது மிகவும் அபூர்வமானது. அதில் மிகவும் முக்கியமானது ஸ்ரீநாத்தின் தற்கொலை. மலையாள படங்களில் நடித்து வந்த ஸ்ரீநாத் 'ரயில் பயணங்கள்' படம் மூலம் தமிழில் அறிமுகமானார். டி.ராஜேந்தர் இயக்கிய இந்த படத்தில் அவருடன் ஜோதி நாயகியாகவும், ராஜிவ் வில்லனாகவும் நடித்திருந்தனர்.
காதல் தோல்வியை மையமாக வைத்து உருவான இந்த படத்தில் ஸ்ரீநாத் காதலில் தோற்று சோகமான வாழ்க்கை வாழ்பவராக நடித்திருந்தார். இந்தப் படத்திற்கு பிறகு சின்ன முள் பெரிய முள், கள் வடியும் பூக்கள், பூவிழி வாசலிலே படங்களில் மட்டுமே நடித்தார் ஆனால் மலையாளத்தில் 60க்கும் மேற்பட்ட படங்களில் நடித்ததார்.
2010ம் ஆண்டு 'சிகார்' என்ற படத்தில் நடித்தார். இதன் படப்பிடிப்பிற்காக எர்ணாகுளத்தில் உள்ள ஒரு ஓட்டலில் தங்கி இருந்தபோது அங்கு தற்கொலை செய்து கொண்டார். குடும்ப பிரச்சினைகள் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது. அவரது மரணம் தமிழ், மலையாள சினிமாவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.