தென்தமிழகத்து இளைஞர்களின் கதை 'பைசன்': இயக்குனர் மாரி செல்வராஜ் | ஜாவா சுந்தரேசன் ஆக மாறிய சாம்ஸ் | மூக்குத்தி அம்மன்-2 பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு | கேரளாவை தொடர்ந்து ஹிந்தியிலும் சென்சார் போர்டு சிக்கலில் ஜானகி டைட்டில் | தமிழ் புத்தாண்டு தினத்தில் சூர்யாவுடன் மோதும் விஷால்! | என் படங்களுக்காக ரசிகர்களை எதிர்ப்பார்ப்புடன் காத்திருக்க வைப்பேன்! - விஷ்ணு விஷால் | விளையாட்டால் நிகழும் பிரச்னையே ‛கேம்' : சொல்கிறார் ஷ்ரத்தா ஸ்ரீநாத் | நெல் விவசாயத்தில் இறங்கிய நயன்தாரா பட இயக்குனர் | தெலுங்கில் முதல் முறையாக நுழைந்த அக்ஷய் கன்னா ; சுக்ராச்சாரியார் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் | கன்னட நடிகர் தர்ஷனுக்கு தனிமை சிறை ஏன்? நீதிமன்றத்தில் மனு தாக்கல் |
ஜெமினி ஸ்டுடியோ மூலம் ஏராளமான படங்களை தயாரித்த எஸ்.எஸ்.வாசன் ஆரம்பத்தில் படம் தயாரிக்கும் எண்ணம் இல்லாமல் இருந்தார். அவருக்கு ஒரு ஸ்டூடியோ நடத்த வேண்டும் என்பதே நோக்கமாக இருந்தது. அப்போதைய பிரபலமான இயக்குனர் கே.சுப்பிரமணியம் நடத்தி வந்த மோசன் பிக்சர்ஸ் கம்பெனி ஏலத்துக்கு வந்த போது அதனை எஸ் எஸ் வாசன் வாங்கி 'ஜெமினி ஸ்டுடியோ' என்று பெயர் மாற்றினார்.
இந்த ஸ்டூடியோவில் முதலில் தயாரான திரைப்படம் 'மதன காமராஜன்'. இந்த படத்தை திண்டுக்கல்லை சேர்ந்த 20 தொழிலதிபர்கள் இணைந்து தயாரித்தார்கள். ஆனால் அவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக படம் பாதியிலேயே நின்றது. இதனால் அந்தப் படத்தை தானே தயாரிக்க முன் வந்தார் வாசன்.
இந்த படத்தின் மூலம் தயாரிப்பின் நுணுக்கங்களை கற்றுக் கொண்ட வாசன், அதன் பிறகு ஏராளமான படங்களை தயாரித்தார். இந்த படம் நாட்டுப்புறக் கதையை அடிப்படையாகக் கொண்டது. 1941ம் ஆண்டு வெளிவந்த இந்த படத்தில் சீனி சடகோபன், கேஎல்வி வசந்தா, என்.கிருஷ்ணமூர்த்தி, கொத்தமங்கலம் சுப்பு, டி.எஸ். துரைராஜ் எம்.டி.ராஜம்மா உள்பட பலர் நடித்திருந்தனர். பி.என். ராவ் என்பவர் இயக்கியிருந்தார்.
ஒரு ஓவியத்தில் உள்ள அழகான பெண்ணை பார்க்கும் இளவரசன் அந்தப் பெண்ணைத்தான் மணப்பெண் என்று பிடிவாதமாக இருந்து மனநலம் பாதிக்கப்பட்டதால் அந்தப் பெண்ணை தேடி கண்டுபிடித்து அவனுக்கு மனம் முடித்து வைப்பது மாதிரியான கதை. படம் வெளியாகி பெரிய வெற்றி பெற்றது . ஜெமினி ஸ்டுடியோவும் தொடர்ந்து படங்களை தயாரிக்க தொடங்கியது.