ரச்சிதாவா இப்படி : பயர் பாடல் வெளியானது | வீரம் படத்தினால் என கேரியர் பாதிப்பு ஆனது : மனோ சித்ரா | காஞ்சனா 4ம் பாகத்தின் படப்பிடிப்பு துவங்கியது! | பேட் கேர்ள் பட டீசருக்கு சென்சார் வாங்கவில்லையா? | 100வது நாளில் அமரன் படம் | மாற்றி அறிவிக்கப்பட்ட மம்முட்டியின் பஷூக்கா ரிலீஸ் தேதி | 9 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பிரித்விராஜ் படத்தை இயக்கும் ஜீத்து ஜோசப் | கேரள கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட நாகசைதன்யா | துல்கர் சல்மான் படம் மூலம் மீண்டும் டைரக்சனுக்கு திரும்பும் மின்னல் முரளி ஒளிப்பதிவாளர் | பிளாஷ்பேக் : மூன்றாம் பிறை படத்திற்காக ஸ்ரீதேவிக்கு தேசிய விருது கிடைக்காதது ஏன்? |
தமிழில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் கூலி படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் ஸ்ருதிஹாசன். அதோடு தெலுங்கு, ஹிந்தியில் தயாராகி வரும் 'டகோயிட்' என்ற படத்திலும் ஆத்வி சேஷ் உடன் இணைந்து நடித்து வந்தார் ஸ்ருதிஹாசன். ஆனால் இந்த படத்தின் படப்பிடிப்பில் சில நாட்கள் கலந்து கொண்ட ஸ்ருதிஹாசன் திடீரென்று விலகி இருக்கிறார். அவருக்கு பதிலாக மிருணாள் தாக்கூர் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். இந்த நிலையில் 'டகோயிட்' படத்தின் கதையில் ஹீரோவின் தலையீடு அதிகமாக இருந்ததால்தான் ஸ்ருதிஹாசன் அப்படத்தில் இருந்து அவர் விலகியதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த படத்தை ஷானில் டியோ என்பவர் இயக்கி வருகிறார்.