ஹீரோவான யு டியூபர் | 4 வருடங்களுக்கு பிறகு வெளியானது 'பேமிலி மேன் 3' | 8 மணி நேர வேலை: ஓங்கி ஒலிக்கும் நடிகைகளின் குரல் | சர்வதேச திரைப்பட விழாவில் 'அமரன்' டீம் | டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் |

துல்கர் சல்மான் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‛லக்கி பாஸ்கர்' படம் சூப்பர் ஹிட்டானது. அடுத்து ‛ஆர்.டி.எக்ஸ்' பட இயக்குனர் நகாஷ் ஹிதாயத் இயக்கத்தில் துல்கர் சல்மான் தயாரித்து, கதாநாயகனாக மலையாளத்தில் புதிய படத்தில் நடிக்கவுள்ளார் என ஏற்கனவே தகவல் வெளியானது. கடந்த சில மாதங்களாக இந்த படத்திற்கான முன் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் இந்த படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க எஸ்.ஜே. சூர்யா இணைந்துள்ளார். மேலும், கதாநாயகியாக நடிக்க பிரியங்கா மோகன் இணைந்துள்ளார். ஏற்கனவே துல்கர் சல்மான், பிரியங்கா மோகன் இருவரும் இணைந்து ஒரு விளம்பர படத்தில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்கிறார்கள்.




