அமெரிக்காவில் ஏப்., 9ல் குட் பேட் அக்லி பிரீமியர் காட்சி | முதல் கடார் என் சினிமாவை மூடியது... இண்டாவது கடார் திறந்து வைத்தது : சன்னி தியோல் | அண்ணன் கடனை என்னால் அடைக்க முடியாது: கோர்டில் நடிகர் பிரபு தகவல் | பிளாஷ்பேக்: சமகாலத்தில் எடுக்கப்பட்டு சாதனையையும், வேதனையையும் சந்தித்த இரண்டு “ஞானசௌந்தரி”கள் | 'ரெட்ரோ' டப்பிங் பணிகளை நிறைவு செய்த சூர்யா | 'டிமான்டி காலனி 3' பணியில் அஜய் ஞானமுத்து! | ரூ.25 கோடிக்கு பிஸ்னஸ் ஆன 'பேடி' பட ஆடியோ உரிமை | உடை மாற்றும் போது அத்துமீறிய இயக்குனர்! - ஷாலினி பாண்டே | 'ரெய்டு 2' படத்தில் சிறப்பு பாடலில் தமன்னா! | 'சாரி' கவர்ச்சி படமல்ல, கருத்து படம்: ராம் கோபால் வர்மா |
ஜவான் படத்தைத் தொடர்ந்து தனது அடுத்த படத்தை இயக்கும் வேலைகளை ஒரு பக்கம் கவனித்து வருகிறார் இயக்குனர் அட்லி. இன்னொரு பக்கம் இரண்டு பாலிவுட் கம்பெனிகளுடன் இணைந்து தற்போது பேபி ஜான் என்கிற படத்தையும் ஹிந்தியில் தயாரித்து உள்ளார். ஜீவா நடித்த கீ என்கிற திரைப்படத்தை இயக்கிய காலீஸ் தான் இந்த படத்தை இயக்கியுள்ளார். இதில் வருண் தவான் நாயகனாக நடிக்க கீர்த்தி சுரேஷ், வாமிகா கபி ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். இந்தப்படம் விரைவில் ரிலீஸ் ஆக இருப்பதை முன்னிட்டு மும்பையில் பிரபல நடிகர் கபில் சர்மா நடத்தும் ரியாலிட்டி ஷோ ஒன்றில் இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிக்காக படக்குழுவினருடன் கலந்து கொண்டார் இயக்குனர் அட்லி.
இந்த நிகழ்ச்சியில் அட்லியிடம் கேள்வி கேட்ட கபில் சர்மா கொஞ்சம் கூட இங்கிதம் இல்லாமல் அவரது தோற்றம் குறித்து ஒரு கேள்வியை கேட்டார். அதற்கு அட்லியும் அமைதியான முறையில் கபில் சர்மாவுக்கு பதிலடி கொடுத்து வாயை அடைத்தார். ஆனாலும் இது குறித்த வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் வெளியாகி கபில் சர்மாவுக்கு பல இடங்களில் இருந்தும் கண்டனங்கள் குவிந்து வருகின்றன. இந்த நிலையில் பிரபல பின்னணி பாடகி சின்மயி தன்னுடைய கடுமையான கண்டனத்தை கபில் சர்மாவுக்கு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “காமெடி என்கிற பெயரில் இதுபோன்று நிறத்தை வைத்து அநாகரிகமாக கேள்வி கேட்கும் பழக்கத்தை இவர்கள் ஒருபோதும் நிறுத்தப் போவதில்லை. ஏதோ ஒரு வகையில் கொஞ்சம் செல்வாக்கை பெற்றுக் கொண்டுள்ள கபில் சர்மா போன்றவர்கள் இப்படி பேசுவது துரதிஷ்டவசமானது. அதே சமயம் ஆச்சரியப்படக்கூடியது அல்ல” என்று கூறியுள்ளார்.