செப்., 19ல் ‛கிஸ்' ரிலீஸ் | டிரோல்களுக்கு ஜான்வி கபூர் கொடுத்த விளக்கம் | அழகுக்கு அனன்யா பாண்டே தரும் ‛டிப்ஸ்' | தமிழ் சினிமாவை அழிக்கும் நோய் : ஆர்கே செல்வமணி வேதனை | மீண்டும் ஹீரோவான 90ஸ் நாயகன் ஆக்ஷன் கிங் அர்ஜுன்! | ஐகோர்ட் உத்தரவு : ரவி மோகன் சொத்துக்களை முடக்க வாய்ப்பு | ‛தக் லைப்' தோல்வி கமலை பாதித்ததா... : ஸ்ருதிஹாசன் கொடுத்த பதில் | ஜெயிலர் 2 வில் இணைந்த சுராஜ் வெஞ்சாரமூடு | அக்டோபரில் துவங்குகிறது பிக்பாஸ் சீசன் 9 | அசோக் செல்வன் ஜோடியான நிமிஷா சஜயன் |
சின்னத்திரை நடிகரான நேத்ரன் 25 வருடங்களாக தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருகிறார். அவரது மனைவி தீபாவும் பிரபல சின்னத்திரை நடிகை தான். இவரது மூத்த மகள் அபிநயாவும் சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்துவிட்டார். இப்படி எல்லாமே பாசிட்டிவாக சென்று கொண்டிருக்க, யாரும் எதிர்பாராத வகையில் நேத்ரன் புற்றுநோய் பாதிப்பால் காலமானார். இதனைதொடர்ந்து பல செலிபிரேட்டிகள் நேத்ரனின் நல்ல குணத்தை கூறி அவருக்காக வருத்தம் தெரிவித்து வருகின்றனர். அண்மையில் நேத்ரனின் மகள் நேத்ரனின் இளவயது புகைப்படங்களை வெளியிட்டிருந்ததை பார்த்து தமிழ் சினிமா ஒரு நல்ல ஹீரோவை இழந்துவிட்டதாக பலரும் கருத்து தெரிவித்திருந்தனர். இந்நிலையில், நேத்ரனின் மனைவி தீபாவும் தனது கணவருடன் ஜோடியாக எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். இதை பார்த்த பலரும் எமோஷனலாகி தீபாவுக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.