2026ம் ஆண்டின் முதல் வெற்றி 25வது நாளில்… | வாய்ப்பை வீணாக்கும் 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' | ஓடிடியில் கடுமையாக டிரோல் செய்யப்படும் 'தி ராஜா சாப்' | ஓடிடியில் வெளியாகும் பொங்கல், சங்கராந்தி படங்கள் | சூர்யாவின் 'கருப்பு': விரைவில் ரிலீஸ் தேதி அறிவிப்பு | 'டாக்சிக்' தெலுங்கு வியாபாரம் 120 கோடி உண்மையா? | வாரணாசி வெளிநாட்டு உரிமை தான் ராஜமவுலியின் சம்பளம்? | ஆபாச தாக்குதல் : ஈஷா ரெப்பா போலீஸில் புகார் | மூன்றாம் பாகத்தோடு திரிஷ்யம் முடிவடைகிறது : ஜீத்து ஜோசப் | துரந்தர் 2 படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்த விக்கி கவுசல், யாமி கவுதம் |

ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில், சூர்யா கதாநாயகனாக நடிக்கும் அவரது 45வது படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் கோயம்பத்தூரில் ஆரம்பமானது. இப்படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைக்கிறார் என்று அதிகாரப்பூர்வமாகவே அறிவிக்கப்பட்டது. ஆனால், தற்போது அப்படத்திலிருந்து அவர் திடீரென விலகியிருக்கிறார்.
அவருக்குப் பதிலாக சாய் அபயங்கர் இப்படத்தின் இசையமைப்பாளராக ஒப்பந்தம் ஆகியுள்ளார். பின்னணிப் பாடகர் திப்பு, பாடகி ஹரிணி ஆகியோரின் மகன்தான் சாய் அபயங்கர். 'கட்சி சேரா' என்ற அவரது ஆல்பம் இந்த வருடம் வெளியாகி சூப்பர் ஹிட் ஆனது. இசைத் தளங்களில் அதிகம் கேட்கப்பட்ட பாடலாக அது அமைந்துள்ளது.
ஏற்கெனவே 'பென்ஸ்' என்ற படத்திற்கு இசையமைக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். தற்போது சூர்யாவின் 45வது படத்திற்கும் இசையமைப்பாளராகப் பணியாற்ற உள்ளார்.
ஏஆர் ரஹ்மான் திடீரென விலகியதற்கான காரணம் என்ன என்பதை படத் தயாரிப்பு நிறுவனம் அறிவிக்கவில்லை.




