அனுஷ்காவின் காதி படத்தில் முக்கிய வேடத்தில் விக்ரம் பிரபு | பெரிய படங்ளை வாங்கிய ஓடிடி நிறுவனம் | நட்புக்காக கெஸ்ட் ரோலில் நடித்ததுடன் சக்சஸ் மீட்டிலும் கலந்து கொண்ட மம்மூட்டி | மூன்று முடிச்சு சீரியலில் என்ட்ரி தரும் மிதுன் | மறுபிறவி தந்த கிருஷ்ணதாசி - நளினி பேட்டி | பிக்பாஸ் வீட்டில் லாஸ்லியா | பொங்கல் போட்டியில் முந்தும் 'மத கஜ ராஜா' | ஒரே நாளில் வசூல் அப்டேட்டை நிறுத்திய 'கேம் சேஞ்ஜர்' | நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு திறக்கப்படும் 'வாடிவாசல்' | ரஜினி நடிக்கும் 'ஜெயிலர் 2': அதிகாரப்பூர்வ அறிவிப்பு |
டிச.,5ல் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா-2 படத்தின் முதல் நாள் முதல் காட்சியை பார்க்க ஹைதராபாத்தில் உள்ள சந்தியா என்கிற தியேட்டருக்கு தனது கணவர் குழந்தைகளுடன் சென்ற ரேவதி என்கிற பெண் கூட்ட நெரிசலில் சிக்கி பலியான நிகழ்வு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து தெலுங்கானாவிலும் அதிகாலை காட்சிகளுக்கு தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நெரிசலில் ரேவதியின் கணவரான பாஸ்கரும் மகளான ஷான்வியும் தப்பி பிழைத்து விட, ரேவதி பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயம் அடைந்த அவர்களது மகன் ஸ்ரீ தேஜ் தற்போது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த நிலையில் தனது மனைவியின் இந்த திடீர் மரணத்தால் அதிர்ச்சியில் இருக்கும் கணவர் பாஸ்கர் கூறும்போது, தான் இப்போது உயிர் வாழ்வதே தனது மனைவி செய்த தியாகத்தால் தான் என்று கூறியுள்ளார். அதாவது கடந்த சில வருடங்களுக்கு முன்பு கல்லீரல் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற போது தன்னுடைய கல்லீரலில் ஒன்றை எனக்கு கொடுத்து எனக்கு மறுவாழ்வு கொடுத்தார் என் மனைவி. ஆனால் அப்படிப்பட்டவர் இன்று என்னை விட்டுப் போய்விட்டார் என கண்கலங்க கூறியுள்ளார். இந்த தகவல் ரசிகர்களை மேலும் வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.