'ரெய்டு-2' படத்தில் தமன்னாவின் 'நாஷா' கிளாமர் பாடல் வெளியீடு! | சோசியல் மீடியாவில் விமர்சித்த ரசிகர்களுக்கு திரிஷா கொடுத்த கமெண்ட்! | வேறு வழியின்றி விஜய் படத்தை இயக்கினேன் ; தங்கர் பச்சான் மகன் பட விழாவில் எஸ்.ஏ சந்திரசேகர் பரபரப்பு பேச்சு | தெலுங்கில் தனது முதல் படப்பிடிப்பை நிறைவு செய்த சோனாக்ஷி சின்ஹா | திரில்லரும் அல்ல.. பீல் குட் படமும் அல்ல.. 'தொடரும்' படம் குறித்து இயக்குனர் புது தகவல் | காருக்கு பேன்சி நம்பர் வாங்க போட்டி ; குஞ்சாக்கோ போபனுக்கு லக்.. நிவின்பாலிக்கு செக் | அஜித் குறித்து நெகிழ்ச்சி பதிவிட்ட பிரியா பிரகாஷ் வாரியர் | 'மதராஸி' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய அப்டேட்! | ராகவா லாரன்ஸின் 'காஞ்சனா 4, பென்ஸ்' படங்களின் நிலவரம் என்ன? | சினிமா சங்கப் பிரச்னைகள் : தயாரிப்பாளர் சங்கம் போலீசில் புகார் |
தொகுப்பாளினி, இன்ஸ்டாகிராமர், ஆக்டர் என பல பரிமாணங்களில் ஜொலிப்பதுடன், கண்ணே கலைமானே, அடுத்த சாட்டை போன்ற எண்ணற்ற படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கும் ஒரு இடமுண்டு என்று நிரூபித்துக்கொண்டிருக்கிறார் நடிகை ஷீலா அனு. குமரிமாவட்டம் நாகர்கோவிலில் பிறந்து தன் முயற்சியால் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை நோக்கி முன்னேறிக் கொண்டுள்ளார்.
அவர் பேசியதிலிருந்து...
பெண்கள் சினிமாத்துறைக்கு செல்கிறார்கள் என்றாலே குடும்பத்தில் எதிர்ப்புகள் வரத்தான் செய்யும். ஆனால் நான் சிறிய வயதிலேயே பாட்டும், டான்சுமாக இருந்ததால் சினிமாத்துறையில் கால் பதிக்க முயற்சித்த போது ஓ.கே., சொல்லி விட்டனர் அப்பாவும், அம்மாவும்.
சினிமாவை மனதில் வைத்து நாகர்கோவிலில் பள்ளி படிப்பு முடித்ததும் தனியார் சேனலில் தொகுப்பாளினியாக சேர்ந்தேன். அப்போது மலையாள சினிமா இயக்குனர் ஜான் கெட்டி படத்தில் நடிக்க வாய்ப்பு அளித்தார். இதற்கிடையில் ஈரமான ரோஜாவே சீரியல் வாய்ப்பும் வந்தது. அதில் காதுகேளாத பெண்ணாக அப்பாவி கேரக்டரில் நடித்தேன். அது எனக்கு பிரேக் பெற்று கொடுத்தது. எங்கு சென்றாலும் அந்த சீரியலில் நான் நடித்த தேன்மொழி கதாபாத்திரம் பெயரை குறிப்பிட்டு மக்கள் அடையாளம் கண்டு வரவேற்பு கொடுத்தனர்.
பிறகு உதயநிதி நடித்த கண்ணே கலைமானே படத்தில் அவரது தாய் மாமா பெண் கேரக்டரில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அது தமிழ் சினிமாவில் ஒரளவு பெயர் பெற்று கொடுத்தது. சமுத்திரகனி நடித்த அடுத்தசாட்டை, சிலம்பரசன் நடித்த ஈஸ்வரன், நாடோடி 2 உள்ளிட்ட படங்களில் வாய்ப்பு கிட்டியது. லைசென்ஸ் படத்தில் முக்கிய கேரக்டரிலும், பாட்டி சொல்லை தட்டாதே படத்தில் நாயகியாகவும் நடித்துள்ளேன்.தற்போது யோகிபாபு நடிக்கும் சன்னிதானம் படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்கிறேன். மேலும் ஒரு சீரியல், ஒரு படத்தில் நடிக்க பேச்சுவார்த்தை போய் கொண்டுள்ளது. அம்மா திருவனந்தபுரம் என்பதால் மலையாள படங்களில் நடிக்கவும் வாய்ப்பு வருகிறது.
இந்தளவுக்கு நான் நடிக்க காரணம் நடிகர் தனுஷ் தான். பள்ளியில் படிக்கும் போதே தனுஷ் படங்களை விடாமல் பார்த்து விடுவேன். புத்தகங்களில் அவரது படங்களை ஒட்டி வைத்து கொள்வேன். அவர் படத்தில் நானும் ஒரு கேரக்டரிலாவது நடிக்க ஆசை. ஒரு முறை மும்பை ஷூட்டிங் ஒன்றில் அவரை சந்தித்தேன். ஆனால் பேச முடியவில்லை.
என்னை பார்க்கும் எல்லோருமே பிட்னஸ் ரகசியம் என கேட்கின்றனர். நான் பிட்னஸ்க்காக எதுவும் செய்வதில்லை. உயரத்திற்கு ஏற்ப எடை இருப்பதால் அதில் அக்கறையும் காட்டுவதில்லை. போதியளவு உணவு எடுத்து கொள்வேனே தவிர அதிகமாக எடுத்து கொள்வதில்லை. மீன் குழம்பு என்றால் ஒரு பிடி பிடித்து விடுவேன். ஓய்வு கிடைத்தால் எல்லா கோயில்களுக்கும் சென்று விடுவேன். ஊரில் இருக்கும் போது வார சனிக்கிழமைகளில் சுசீந்திரம் தாணுமாலயசுவாமி கோயிலுக்கு சென்று விடுவேன். வருங்கால தலைமுறையினர் ஷீலா அனு என ஒரு நடிகை இருந்திருங்காங்க என பேசுமளவுக்கு பெயர் எடுத்தால் போதும். அதுதான் என் ஆசை என்றார்.