சனாதன தர்மம் இளைஞர்களிடம் போய் சேரணும் : சென்னையில் நடிகர் பாலகிருஷ்ணா பேச்சு | ஜெயிலர் 2 படப்பிடிப்பில் இணைந்த மோகன்லால் | கல்கி 2898 ஏடி 2 படம் : தீபிகாவிற்கு பதில் பிரியங்கா சோப்ரா | மீண்டும் சுதா இயக்கத்தில் நடிக்கும் சிவகார்த்திகேயன் | ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் புதிய படம் ஓ சுகுமாரி | குட் பேட் அக்லி... இளையராஜா பாடல் விவகாரம் : மனு தள்ளுபடி | நடிகர் திலீப்பின் ராசி... தர்ஷனுக்கும் கை கொடுக்குமா? டிசம்பர் 11ல் தெரியும் | மோகன்லாலை மீண்டும் இயக்கும் தொடரும் பட இயக்குனர் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது | ஜெயிலர் 2விலும் தொடர்கிறார் விநாயகன் | ‛பார்டர் 2'வில் தில்ஜித் தோசன்ஜ் முதல் பார்வை வெளியீடு |

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'கூலி'. அனிரூத் இசையமைக்கும் இப்படத்தில் சவுபின் சாஹிர், நாகர்ஜூனா, ஸ்ருதிஹாசன், சத்யராஜ் உள்ளிட்ட பல பிரபலங்கள் இணைந்து நடிக்கின்றனர். ஏற்கனவே இதன் படப்பிடிப்பு சென்னை, ஐதராபாத், விசாகப்பட்டினம் ஆகிய பகுதிகளில் நடைபெற்றது. தொடர்ந்து இப்போது கூலி படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் ஜெய்ப்பூரில் துவங்குகிறது. இதில் அமீர்கான் சம்மந்தப்பட்ட காட்சிகள் பிரதானமாக படமாக்கபடுவதாக கூறப்படுகிறது. ஆனால் இதில் ரஜினிகாந்த் நடிக்கின்றனரா என்பது குறித்து எந்த தகவலும் இல்லை.