'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
காந்தாரா படத்தை இயக்கி நடித்த ரிஷப் ஷெட்டி, மராட்டிய மன்னன் சத்ரபதி சிவாஜியின் வாழ்க்கை வரலாறு படத்தில் சத்ரபதி சிவாஜியாக நடிக்கப் போகிறார். இந்த படத்தை 2027ம் ஆண்டு ஜனவரி 23ம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளார்கள். இந்த படத்தின் போஸ்டர் உடன் தனது இணையப்பக்கத்தில் ஒரு பதிவு போட்டுள்ளார் ரிஷப் ஷெட்டி.
அதில், இந்தியாவின் பெருமைக்குரிய அரசர்களில் ஒருவரான சத்ரபதி சிவாஜி மகாராஜா திரைப்படத்தை வழங்குவதில் மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறோம். இது ஒரு சாதாரணமான படம் அல்ல, ஒரு போர்க்குரல் . இந்திய வரலாற்றில் மறக்க முடியாத பெருமைக்குரிய சத்ரபதி சிவாஜி என்ற வீரனுக்கு செலுத்தும் மரியாதையாகும். சத்ரபதி சிவாஜியின் சொல்லப்படாத அற்புதமான திரைப்படமாக இந்த படம் உருவாகிறது என்று அவர் பதிவிட்டுள்ளார்.
காந்தாரா படத்தை அடுத்து அப்படத்தில் இரண்டாம் பாகம் மற்றும் ஜெய் ஹனுமான் போன்ற படங்களில் தற்போது நடித்து வரும் ரிஷப் ஷெட்டி, இந்த படங்களை முடித்ததும் சத்ரபதி சிவாஜி படத்தில் நடிக்கப் போகிறார்.