வீர தீர சூரன் படத்தின் ரிலீஸ் தேதி வெளியானது | உயிரை காத்த ஆட்டோ ஓட்டுநரை சந்தித்து கவுரவித்த சைப் அலிகான் | மாதவன் பயந்த இரண்டு விஷயங்கள் | ஜெயிலர் 2 : சிவராஜ்குமாருக்கு பதில் பாலகிருஷ்ணா | சுந்தர்.சி யின் வல்லான் டீசர் வெளியீடு | யஷ் படக்குழுவிற்கு கர்நாடக வனத்துறை நோட்டீஸ் | விமான நிலையத்தில் வீல் சேரில் அமர்ந்து வந்த ராஷ்மிகா | மீண்டும் விஷால் - சுந்தர் சி கூட்டணி? | 'புஷ்பா' இயக்குனர் வீட்டில் வருமான வரி சோதனை | எனை நோக்கி பாயும் தோட்டா என் படமே அல்ல : அதிர்ச்சி கொடுத்த கவுதம் மேனன் |
நடிகர் ஜெயம் ரவி தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தாலும் கடந்த சில வருடங்களாக இவரது நடிப்பில் வெளிவந்த பொன்னியின் செல்வன் படம் தவிர்த்து மற்ற படங்கள் தொடர் தோல்வியை சந்தித்தது. தற்போது, காதலிக்க நேரமில்லை, ஜீனி படங்களில் நடித்துள்ளார். இதுதவிர இரண்டு படங்கள் கைவசம் வைத்துள்ளார்.
இந்நிலையில் சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயனின் 25வது படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க ஜெயம் ரவி ஒப்பந்தம் ஆகியுள்ளாராம். இதற்காக ஜெயம் ரவி நான்கு நிபந்தனைகள் போட்டுள்ளாராம்.
இது குறித்து நமக்கு கிடைத்த தகவலின் படி, இந்த படத்திற்கு நான் கேட்கும் தொகையை சம்பளமாக தர வேண்டும். சிவகார்த்திகேயனுக்கு நிகராக காட்சிகள் இடம்பெற வேண்டும். என் கால்ஷீட் தேதிக்காக வற்புறுத்தல் செய்ய கூடாது. இப்படத்தின் விளம்பரம் மற்றும் புரொமோசனில் சிவகார்த்திகேயனுக்கு நிகரான முக்கியதுவம் தர வேண்டும்" என நான்கு நிபந்தனைகள் முன்வைத்துள்ளார் ஜெயம் ரவி.