Advertisement

சிறப்புச்செய்திகள்

நயன்தாரா மீது வழக்கு தொடர்ந்த தனுஷ்: பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு | மலையாள சினிமாவில் பெண்களுக்கு பாதுகாப்பு குறைவு : சுஹாசினி திடீர் குற்றச்சாட்டு | நானும் கட்சி தொடங்குவேன் : பார்த்திபன் சொல்கிறார் | பிரபஞ்சத்துக்கே நான்தான் சூப்பர் ஸ்டார்: மிர்ச்சி சிவா கலகல | பிளாஷ்பேக்: ஜெயனுக்கு பதில் நடித்த ரஜினி | பிளாஷ்பேக்: காணாமல் போன வெற்றிப்பட நாயகன், நாயகி | 'விடுதலை 2' டிரைலர் வசனம்: விஜய்யை குறி வைக்கிறதா? | சூர்யா 45 படப்பிடிப்பு பொள்ளாச்சியில் இன்று ஆரம்பம் | 30 மில்லியனைக் கடந்த கீர்த்தி சுரேஷின் கிளாமர் நடனம் | 9 வயது மூத்த பெண்ணுடன் திருமணம்? கமென்ட் 'ஆப்' செய்த அகில் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நயன்தாரா மீது வழக்கு தொடர்ந்த தனுஷ்: பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

27 நவ, 2024 - 12:24 IST
எழுத்தின் அளவு:
Dhanush-sued-Nayanthara:-Court-orders-to-respond


நடிகை நயன்தாரா அண்மையில் தனது 40வது பிறந்த நாளை கொண்டாடினார். இதையொட்டி, அவரது வாழ்க்கை வரலாற்றை விளக்கும் ஆவணப் படம் ஒன்று தயாரிக்கப்பட்டு, நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டது. இந்த ஆவணப்படத்தில், தனது கணவர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில், நயன்தாரா நடித்து, சூப்பர் டூப்பர் ஹிட்டான 'நானும் ரவுடி தான்' படத்தின் பாடல்களையும், காட்சிகளையும் பயன்படுத்த அவர்கள் விரும்பினர். இதற்காக 2 ஆண்டுகளாக அனுமதி கேட்டும், அப்படத்தின் தயாரிப்பாளரான நடிகர் தனுஷ் அனுமதி வழங்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இதற்கிடையே ஆவணப்படத்தின் டிரைலரில் நானும் ரவுடி தான் படப்பிடிப்பில் தன்னுடைய அனுமதி இல்லாமல் 3 வினாடி காட்சிகளைப் பயன்படுத்துவதற்கு நயன்தாராவிடம் ரூ.10 கோடி அபராதம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியிருந்தார் தனுஷ். இதனால், நேரடியாக தனுஷை விமர்சித்து நயன்தாரா அறிக்கை விட்டார். இதற்கு, பல நடிகைகள் ஆதரவு தெரிவித்தனர். இது தமிழ் சினிமா உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், அவரது பிறந்தநாள் அன்று வெளியான அந்த ஆவணப்படத்தில் சுமார் 37 வினாடிகள் நானும் ரவுடி தான் படக்காட்சிகள் இடம்பெற்றிருந்தது.

இந்த நிலையில் நடிகை நயன்தாராவுக்கு எதிராக நடிகர் தனுஷின் வொண்டர்பார் நிறுவனம் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், மும்பையைச் சேர்ந்த நெட்பிளிக்ஸ் நிறுவனத்துக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய அனுமதி கோரி வொண்டர்பார் நிறுவனம் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி அப்துல் குத்தூஸ், எதிர்மனுதாரர்களாக சேர்க்கப்பட்டுள்ள நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஆகியோர் சென்னையில் வசிப்பதாகக் கூறி, இந்த வழக்கை தாக்கல் செய்ய வொண்டர்பார் நிறுவனத்துக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளார். மேலும், வழக்கு தொடர்பாக நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மலையாள சினிமாவில் பெண்களுக்கு பாதுகாப்பு குறைவு : சுஹாசினி திடீர் குற்றச்சாட்டுமலையாள சினிமாவில் பெண்களுக்கு ... தாவணியில் ஜொலிக்கும் பிக்பாஸ் சிவின்! தாவணியில் ஜொலிக்கும் பிக்பாஸ் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in