'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
தமிழ், தெலுங்கு, ஹிந்தி என நடித்துக் கொண்டிருப்பவர் சமந்தா. தன்னுடன் ஜோடி சேர்ந்து நடித்த நாக சைதன்யாவைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்டு சில வருடங்களிலேயே பிரிந்தார். நாக சைதன்யாவுக்கும், 'பொன்னியின் செல்வன்' பட நடிகை சோபிதா துலிபலாவுக்கும் இடையே அடுத்த மாதம் ஹைதராபாத்தில் திருமணம் நடைபெற உள்ளது.
இதனிடையே, சமந்தா நடித்து சமீபத்தில் வெளிவந்த வெப் சீரிஸான 'சிட்டாடல் - ஹனி பன்னி' புரமோஷனுக்காக ஒரு 'ரேப்பிட் பயர்' கேள்வி பதில் வீடியோ ஒன்றை அமேசான் வெளியிட்டது. அதில் நடிகர் வருண் தவான் சமந்தாவிடம், “உங்களது அபத்தமான செலவு, முற்றிலும் பயனற்றது எது," எனக் கேட்டார். அதற்கு சமந்தா, “எனது முன்னாள் கணவருக்கான விலையுயர்ந்த பரிசுகள்' என பதிலளித்தார். 'எவ்வளவு தொகை' என வருண் மீண்டும் கேட்க, 'நிறையவே' என்றார் சமந்தா. உடனே அடுத்த கேள்விக்குப் போவோம் எனக் கூறிவிட்டார்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. நாக சைதன்யா விரைவில் இரண்டாவது திருமணம் செய்து கொள்ள உள்ளார். அதற்காகவே சமந்தா இப்படி ஒரு பதிலளித்திருப்பார் என ரசிகர்கள் அதற்கு கமெண்ட் செய்துள்ளார்கள்.