போலீஸாக நடிக்கும் கவுதம் ராம் கார்த்திக் | கண்ணப்பா படத்திற்கு அடித்த ஜாக்பாட் | அஜித் படத்தை தயாரிக்கும் அஜித் ரசிகர் | டேட்டிங் ஆப் சிக்கல்களை பேசவரும் 'நீ பாரெவர்' | மலையாள இயக்குனர் மீது பாலியல் புகார்: நடிகை கைது | புராணப்படத்தில் நடிக்கும் சமுத்திரகனி | 'ஹரிஹர வீர மல்லு': அவுரங்கசீப் கேரக்டரை மாற்றிய இயக்குனர் | பிளாஷ்பேக்: 3டி படத்தில் நடிக்க மறுத்த ரஜினிகாந்த் | பிளாஷ்பேக்: பெரும் தோல்வி அடைந்த பிரம்மாண்ட படம் | 'கேம் சேஞ்ஜர்' கமெண்ட்: மன்னிப்பு கேட்ட தயாரிப்பாளர் |
சூர்யா நடித்த ‛கங்குவா' படம் திரைக்கு வந்து எதிர்மறையான விமர்சனங்களை ஏற்படுத்தியதை அடுத்து கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் அவர் நடித்துள்ள 44வது படம் அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் திரைக்கு வரவுள்ளது. இந்த படத்தில் சூர்யாவுடன் பூஜா ஹெக்டே, ஜோஜு ஜார்ஜ், கருணாகரன், ஜெயராம் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்க, சந்தோஷ் நாராயணன் இசை அமைத்திருக்கிறார்.
இந்த நிலையில், இந்த சூர்யா 44வது படம் குறித்து இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் ஒரு தகவல் வெளியிட்டு இருக்கிறார். அதில், ‛டிசம்பர் மாதத்தில் இருந்து இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகள் தொடங்கும். அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் இப்படம் திரைக்கு வரும். அதோடு சூர்யா ஒரு மிகச்சிறந்த நடிகர். அவருடன் இணைந்து இந்த படத்தில் பணியாற்றியது மகிழ்ச்சி அளிக்கிறது,' என்று அவர் தெரிவித்திருக்கிறார்.