பூஜா ஹெக்டேவுக்கு என்னதான் ஆச்சு ? | ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்கும் சூரி | அருண் பிரசாத், அர்ச்சனா திருமண நிச்சயதார்த்தம் நடந்தது | பாட்டி மறைவு : அல்லு அர்ஜூன் உருக்கம் | தெரு நாய் தொடர்பான விவாத நிகழ்ச்சி : மன்னிப்பு கேட்டார் படவா கோபி | டிசம்பரில் திரைக்கு வரும் வா வாத்தியார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | ராஜூ முருகனின் மை லார்ட் என்ன பேசுகிறது? | டிரைலர் உடன் புதிய ரிலீஸ் தேதியை அறிவித்த அதர்வாவின் தணல் படக்குழு! | 'குட்டி ஏஐ அனுஷ்கா' வீடியோ பகிர்ந்த அனுஷ்கா | வெளிநாடுகளில் 20 மில்லியன் டாலர் வசூலித்த 'கூலி' |
சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் திரைக்கு வந்துள்ள கக்குவா படம் ஏகப்பட்ட விமர்சனங்களை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக இந்த படம் திரைக்கு வருவதற்கு முன்பு இந்தியா முழுக்க புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார் சூர்யா. அப்போது அவர் பேசியது மட்டுமின்றி அப்படத்தின் இயக்குனர், தயாரிப்பாளர் ஆகியோர் அப்படம் குறித்து வெளியிட்ட பில்டப் செய்திகள் அனைத்தும் தற்போது சோசியல் மீடியாவில் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது. இதன் காரணமாக மிகப்பெரிய அப்செட்டில் இருந்து வருகிறார் சூர்யா.
இந்த நிலையில் தற்போது கார்த்திக் சுப்பராஜ் இயக்கி உள்ள தனது 44வது படத்தில் நடித்திருக்கும் சூர்யா, அவருக்கு தனது சார்பில் சில அட்வைஸ்களை கொடுத்துள்ளார். குறிப்பாக படத்தில் காண்பிக்கும் காட்சிகளை மட்டுமே டிரைலரில் இடம்பெறச் செய்ய வேண்டும். படம் எப்படி இருக்கிறதோ அந்த விஷயங்களை முன் வைத்தே புரமோஷனில் ஈடுபட வேண்டும். எக்காரணம் கொண்டும் மிகப் பெரிய அளவுக்கு பில்டப் செய்திகளை வெளியிட வேண்டாம். அப்படி செய்தால் தியேட்டருக்கு வரும் ரசிகர்களின் எதிர்பார்ப்புகள் அதிகரித்து விடுகிறது என்று கூறியுள்ளார் சூர்யா. அதன் காரணமாகவே சூர்யா 44வது படம் பெரிய ஆர்ப்பாட்டம் இல்லாமல் திரைக்கு இருப்பது தெரிய வந்துள்ளது. இந்த படத்தை அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியிட்ட திட்டமிட்டுள்ளார்கள்.