நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

மலையாள திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் மாளவிகா மேனன், தமிழில் இவன் வேற மாதிரி, பிரம்மன், வெத்து வேட்டு, விழா, பேய் மாமா, அருவா சண்ட உள்ளிட்ட படங்களில் நடித்து இருக்கிறார். மாளவிகாவுக்கு சில மர்ம நபர்கள், சமூக வலைதளங்கள் மூலமாகவும், தொலைபேசி மூலமாகவும் மன உளைச்சல் தரும்படியான டார்ச்சர் கொடுத்து வந்துள்ளனர். இதுகுறித்து மாளவிகா தனது சமூக வலைதள பக்கத்தில் எழுதியிருந்தார்.
''வலைதளத்தில் கண்ணியமற்ற முறையில் அவதூறு பரப்புகின்றனர். யாரை பற்றியும் இழிவாக பேசலாம் என்று நினைக்கிறார்கள். நான் அணியும் ஆடைகள் பற்றியும் செல்போனில் தொடர்பு கொண்டு பேசுகிறார்கள்''. என்று குறிப்பிட்டிருந்தார். இதுகுறித்து கேரள மாநில சைபர் கிரைம் போலீசிடமும் புகார் அளித்திருந்தார்.
இந்த புகாரின் பேரில் கொச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்த நிலையில் மாளவிகாவுக்கு போன் டார்ச்சர் கொடுத்து வந்த அட்டப்பாடியை சேர்ந்த ஸ்ரீஜித் என்ற வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.