அம்மாவின் 2வது திருமணம் ஏற்படுத்திய பாதிப்பு: மனம்திறந்த லிஜோ மோல் ஜோஸ் | பஸ் டிரைவர்களின் பல்லை உடைப்பேன் ; சுரேஷ்கோபி மகன் ஆவேசம் | ஜெயிலர்-2 படப்பிடிப்பில் ரஜினியை சந்தித்து வாழ்த்து பெற்ற மலையாள நடிகர் | காத்திருந்த இயக்குனர்களுக்கு அதிர்ச்சியளித்த ‛அமரன்' | ‛ஏஸ்' எனக்கு ஸ்பெஷலான படம்: ருக்மணி வசந்த் | ‛‛100 வருஷம் ஆனாலும் பாசம் மாறாது'' : மதுரை மக்கள் பற்றி விஷால் கருத்து | ‛‛எனக்கு பிடித்த மதுரையும், மீனாட்சி அம்மனும்...'': ஐஸ்வர்யா லட்சுமி நெகிழ்ச்சி | அம்ரிதா பிரிதமின் வாழ்க்கை வரலாற்றில் நடிக்க விரும்பும் நிம்ரத் கவுர் | இனி ஹீரோ தான்: நடிகர் சூரி 'பளீச்' | பிளாஷ்பேக்: சர்வதேச விருதினை வென்றெடுத்த முதல் தமிழ் திரைப்படம் “வீரபாண்டிய கட்டபொம்மன்” |
மலையாளத் திரையுலகில் கடந்த 40 வருடங்களுக்கு மேலாக முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் மோகன்லால். இவர் மறைந்த பிரபல மூத்த நடிகரான பாலாஜியின் மகள் சுசித்ராவை தான் திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்களுக்கு விஸ்மாயா என்கிற மகளும் பிரணவ் என்கிற மகளும் இருக்கின்றனர். இதில் பிரணவ் மோகன்லால் கடந்த சில வருடங்களாக ஒரு நடிகராக தனது பயணத்தை தொடங்கி படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் மோகன்லால் குறித்து இதுவரை தான் கூறாத சில விஷயங்களை வெளிப்படையாக பேசியுள்ளார் அவரது மனைவி சுசித்ரா.
இது பற்றி அவர் கூறும்போது, “மோகன்லால் நடித்த முதல் படமான மஞ்சில் விரிஞ்ச பூக்கள் படத்திலிருந்து அவரது நடிப்பு எனக்கு பிடிக்கும். பல வருடங்களுக்குப் பிறகு ஒரு குடும்ப திருமண நிகழ்வு ஒன்றில் தான் அவரை முதன் முதலில் நேரில் சந்தித்தேன். அதன் பிறகு அவருக்கே தெரியாமல் தினசரி ஐந்து போஸ்ட் கார்டுகள் அவருக்கு தொடர்ந்து என் பெயர் குறிப்பிடாமல் அனுப்பி வந்தேன். ஒரு கட்டத்தில் அது நான்தான் என அவர் கண்டுபிடித்து விட்டார். எனக்கு திருமணம் என்கிற பேச்சு வந்தபோது மோகன்லாலை நான் விரும்புவதாக வீட்டாரிடம் கூறினேன். என் தந்தை தனது நெருங்கிய நட்பில் இருந்த நடிகை சுகுமாரி மூலமாக இந்த விஷயத்தை மோகன்லாலிடம் தெரிவித்து அதை வெற்றிகரமாக எங்களது திருமணத்தில் முடித்து வைத்தார். வீட்டைப் பொறுத்தவரை அவரை சுந்தர குட்டப்பன் (அழகான பையன்) என்றுதான் செல்லமாக குறிப்பிடுவார்கள். இது அவருக்கே தெரியுமா என்று கூட எனக்கு தெரியாது,'' எனக் கூறியுள்ளார் சுசித்ரா.