மாதவன், கங்கனா படத்தின் தலைப்பு என்ன தெரியுமா? | என் துயரத்தை சிலர் கொண்டாடினர் : சமந்தா | போலீஸ் வேடத்தில் சசிகுமார் | 64வது படத்தில் நடிக்க சம்பளத்தை உயர்த்தினாரா அஜித்குமார்? | தமிழ் புத்தாண்டில் சூர்யா-சிம்பு மோதிக்கொள்கிறார்களா? | 'மா இண்டி பங்காரம்' படத்திற்காக தீவிர ஒர்க் அவுட்டில் இறங்கிய சமந்தா! | விஜய் ஆண்டனியின் 'சக்தி திருமகன்' படத்தை பாராட்டிய இயக்குனர் ஷங்கர்! | பிளாஷ்பேக்: சித்ராவை ஏமாற்றிய முதல் பாடல் | படம் இயக்கவே சினிமாவிற்கு வந்தேன்: செம்மலர் அன்னம் | சின்னத்திரையில் இருந்து சினிமாவுக்கு வரும் இயக்குனர் |

ஒருவரின் வாழ்க்கை வரலாற்றை சொல்லும் படத்தை 'பயோபிக் படங்கள்' என்று அழைக்கிறோம். எல்லா நடிகர்களும் ஒரு பயோபிக் படத்திலாவது நடித்திருப்பார்கள் அல்லது நடிக்க முயற்சிப்பார்கள். எம்.ஜி.ஆர் 'மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன்', சிவாஜி 'கப்பலோட்டிய தமிழன்', ரஜினி 'ராகவேந்திரர்', கமல் வரதராஜ முதலியார் (நாயகன்) இப்படி இந்த பட்டியல் நீளமானது. ஆனால் ஒரு நடிகர் பயோபிக் படங்களில் மட்டுமே நடித்துள்ளார். அவர் 1930 மற்றும் 40களில் வாழ்ந்த தண்டபாணி தேசிகர்.
தஞ்சை மாவட்டம் நன்னிலத்தில் பிறந்த இவர் முறைப்படி இசை கற்று தமிழ் இசை அறிஞரானார். தேவார பாடல்களை தெருக்களில் பாடி வந்தார். பின்னர் இசை ஆசிரியர் ஆனார். இவரது பாடல்கள் தஞ்சை மண்டலம் முழுவதும் பிரபலமாக இருந்தது. இதை கேள்விப்பட்டு அவரை சென்னைக்கு அழைத்து வந்து 'பட்டினத்தார்' படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகப்படுத்தினார்கள். அவர் படத்தில் பட்டினத்தார் பாடல்களை பாடி நடித்தார். அந்த படம் பெரிய வெற்றி பெற்றது.
அதன் பிறகு வள்ளாள மகாராஜா, தாயுமானவர், மாணிக்க வாசகர், நந்தனார், திருமழிசை ஆழ்வார் என ஆன்மீக குருக்களின் வாழ்க்கை படத்தில் நடித்தார். பின்னர் சினிமாவை விட்டு விலகிய அவர் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் இசைத் துறை தலைவராக 15 ஆண்டுகள் பணியாற்றி, மறைந்தார்.