பிப்ரவரி மாதத்தில் மோதும் விக்ரம், சூர்யா படங்கள் | பிரம்மயுகம் படத்திற்கு ஆஸ்கர் அங்கீகாரம் | 'பராசக்தி' என் கேரியரில் மறக்க முடியாத படம் : ஸ்ரீலீலா மகிழ்ச்சி | நடிகை ஆன கபடி வீராங்கனை | பிளாஷ்பேக : சிற்பி மனதில் ஏற்பட்ட காயம் | பிளாஷ்பேக்: ஹீரோவின் தந்தையாக நடித்த சிவாஜி | துரந்தர் பட பிரமாண்ட வெற்றி : சிஷ்யனை பாராட்டிய இயக்குனர் பிரியதர்ஷன் | 23 ஆண்டுகள் கழித்து ஒக்கடு பட இயக்குனருடன் இணைந்த பூமிகா | தி ராஜா சாப் : ஆச்சரியப்படுத்திய அம்மு அபிராமி.. அதிர்ச்சி கொடுத்த கயல் ஆனந்தி | தனுஷ் 54வது படத்தின் டப்பிங் பணி துவங்கியது |

தமிழ் இலக்கிய உலகின் முன்னணி எழுத்தாளரான இந்திரா சவுந்தர்ராஜன் நேற்று மதுரையில் காலமானார். அவருக்கு வயது 65. 700க்கும் மேற்பட்ட சிறுகதைகள், 50க்கும் மேற்பட்ட நாவல்கள் எழுதியுள்ளார். சினிமாவுக்கும் அவருக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு.
புகழ்பெற்ற தொலைக்காட்சி தொடர்களான மர்மதேசம், மந்திர வாசல், விடாது கருப்பு, ருத்ரவீணை போன்றவற்றின் கதையும், வசனமும் இந்திரா சவுந்தராஜனுடடையது. இது தவிர 'அனந்த புரத்து வீடு', தேசிய விருது பெற்ற 'சிருங்காரம்' படத்திற்கு இவர் வசனம் எழுதினார்.
பல இயக்குனர்கள் இவரை நடிக்க அழைத்தும் அதனை மறுத்து வந்த இந்திரா சவுந்தர்ராஜன் கடந்த ஆண்டு வெளிவந்த 'கட்டில்' என்ற படத்தில் நடித்தார். இந்த படத்தில் அவர் பழமையான பொருட்களை வாங்கி விற்பனை செய்யும் வடநாட்டு வியாபாரியாக நடித்தார். அவர் நடித்த முதலும், கடைசி படமும் அதுதான்.
தான் எழுதிய 'சிவம்' என்ற நாவலை தனுஷ் நடிப்பில் சினிமாவாக்க முயற்சித்தார். இதற்காக சில தயாரிப்பாளர்களுடன் பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டிருந்தார், தனுசை சந்திக்க நேரம் கேட்டிருந்தார். இந்த நிலையிலேயே அவரது மரணம் நிகழ்ந்திருக்கிறது.