அஜித் பட ஹீரோயின் யார் | சினிமாவில் நடப்பதை மட்டும் பூதக் கண்ணாடி வச்சு பாக்காதீங்க : குஷ்பு காட்டம் | பழனி முருகன் கோவிலில் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்த விக்னேஷ் சிவன் - நயன்தாரா | அர்ஜுன் தாஸ் குரலைப் பாராட்டிய பவன் கல்யாண் | சுதீப் 47 படத்தை இயக்கப் போகும் 'மேக்ஸ்' இயக்குனர் | புதிய சாதனை படைத்த 'ஹரிஹர வீரமல்லு' டிரைலர் | இந்த வாரம் அப்பா, மகள் ; குரு, சிஷ்யன் படங்கள் மோதல் | லவ் மேரேஜ் படம் ஹிட்டா? : கணக்கு சொல்லாத படக்குழு | '96' இரண்டாம் பாகம் : விலக முடிவெடுத்த விஜய் சேதுபதி? | அபார்ட்மென்ட் வாங்கத் தவிக்கும் '3 பிஹெச்கே', அதைவிட்டு போகச் சொல்லும் 'பறந்து போ'!! |
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், ஜிவி பிரகாஷ்குமார் இசையமைப்பில், சிவகார்த்திகேயன், சாய் பல்லவி மற்றும் பலர் நடிப்பில் தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 31ம் தேதி வெளிவந்த படம் 'அமரன்'. இப்படம் எதிர்பார்த்ததை விடவும் அமோகமாக வசூலைக் குவித்து வருகிறது.
கடந்த வாரம் நான்கு நாட்கள் மிகவும் சிறப்பாக இருந்த வசூல், அதன்பின் வார நாட்களில் மாலை, இரவுக் காட்சிகளில் சிறப்பான வரவேற்புடன் ஓடியது. நேற்றும், நேற்று முன்தினமும் விடுமுறை நாட்கள் என்பதால் மீண்டும் அனைத்து காட்சிகளுக்குமே குறிப்பிடத்தக்க வசூல் இருந்துள்ளது.
200 கோடி வசூலைக் கடந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இப்படம் 250 கோடி வசூலை நிச்சயம் கடந்துவிடும் என பாக்ஸ் ஆபீஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. தெலுங்கில் மட்டும் 25 கோடி மொத்த வசூலைக் கடந்து சுமார் 10 கோடி லாபத்தைக் கொடுத்துள்ளது. அமெரிக்காவில் 15 லட்சம் யுஎஸ் டாலர் வசூலைக் கடந்துள்ளது. இந்த இரண்டு வசூல் நிலவரமும் சிவகார்த்திகேயனுக்கு ஒரு பெரிய மார்க்கெட்டை உருவாக்கித் தந்துள்ளது.
சூர்யா நடித்துள்ள 'கங்குவா' படம் இந்த வாரம் நவம்பர் 14ம் தேதி வெளியாக உள்ள நிலையில் பல தியேட்டர்களில் 'அமரன்' படத்தைத் தூக்கிவிட்டு அதற்குப் பதிலாக 'கங்குவா' படத்தைத் திரையிட தயங்குவதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளது.