புஷ்பா 2 - நான்கு நாட்களில் 800 கோடி வசூல் | பிளாஷ்பேக்: சிகரெட் புகைத்த நாயகி | 'மெட்ராஸ்காரன்' படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் பாடல் | பிளாஷ்பேக்: அண்ணன் தங்கை பாசம் பேசி, அழியா புகழ் வசனகர்த்தாவான ஆரூர் தாஸ் | சூர்யா 45 படத்திலிருந்து ஏஆர் ரஹ்மான் விலகல் | சோஷியல் மீடியா ட்ரோலில் பாதிக்கப்படுவது நடிகைகள் தான் - வாணி போஜன் | மீண்டும் சீரியலில் 'மோதலும் காதலும்' சமீர்! | இந்தியாவில் முதல் நாளில் அதிக வசூலைக் குவித்த டாப் 10 படங்கள் எது தெரியுமா...? | புதிய கார் வாங்கிய ஸ்வாதி கொன்டே! | ஆசை நிறைவேறிய மகிழ்ச்சியில் அணிலா! |
நடிகர் அஜித்குமாரை அவரது ரசிகர்கள் 'தல' எனக் குறிப்பிட்டு கொண்டாடி வருகின்றனர். தீனா படத்திற்கு பிறகு அவருக்கு இந்த அடைமொழியை வைத்து கூப்பிடத் துவங்கினர். இதற்கிடையே கடந்த 2021ம் ஆண்டு தன்னை 'தல' என அழைக்க வேண்டாம் என ஊடகங்கள் மற்றும் ரசிகர்களுக்கு நடிகர் அஜித்குமார் வேண்டுகோள் விடுத்து அறிக்கை வெளியிட்டார். அஜித், அஜித்குமார் அல்லது தனது பெயரின் சுருக்கமான 'ஏகே' என்று அழைத்தால் போதும் எனவும் குறிப்பிட்டிருந்தார்.
ரசிகர்கள் தங்களுக்கு சூட்டும் அடைமொழியை மற்ற நடிகர்கள் பெருமையாக கருதும் நிலையில், அஜித்தின் இந்த முடிவு அப்போது பரபரப்பாக பேசப்பட்டது.
இந்த நிலையில், நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசனும் இதே பாணியை தற்போது கையில் எடுத்துள்ளார். அதாவது, அவரும் தன்னை 'உலக நாயகன்' என அழைக்க வேண்டாம் என்றும், கமல், கமல்ஹாசன், 'கே ஹெச்' என்று குறிப்பிடுங்கள் என ரசிகர்கள் மற்றும் அவரது கட்சியினருக்கு அறிவுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், ''என் மீது கொண்ட அன்பினால் உலக நாயகன் உட்பட பல பிரியம் ததும்பும் பட்டங்களால் என்னை அழைக்கிறீர்கள். இதனால் மகிழ்ந்திருக்கிறேன், நெகிழ்ந்திருக்கிறேன். நிறைய யோசனைக்கு பிறகு மேலே குறிப்பிட்டது போன்ற பட்டங்களையும் அடைமொழிகளையும் துறப்பது என்ற முடிவுக்கு வந்துள்ளேன். எனவே, ரசிகர்கள், ஊடக நண்பர்கள், திரைத்துரை சார்ந்தவர்கள், மநீம கட்சி தொண்டர்கள், சக இந்தியர்கள் என்னை கமல்ஹாசன் என்றோ, கமல் என்றோ, 'கே ஹெச்' என்றோ குறிப்பிட்டால் போதுமானது என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.