ஒரே படம் ஓஹோ வாழ்க்கை... கன்னாபின்னான்னு இழுக்கப்படும் பெயர் : கவலையில் கயாடு லோஹர் | சினிமாவில் 60வது ஆண்டை தொட்ட வெண்ணிற ஆடை மூர்த்தி | ஜெயமோகன் படத்துக்கு இந்த நிலையா? | வில்லனாக மாறிய சேரன் | டான்ஸ் ஆட வெச்சிட்டாங்க : பிரபு நெகிழ்ச்சி | ஹரி ஹர வீரமல்லுவுக்காக 5 ஆண்டுகள் வேறு படங்களில் நடிக்காத நிதி அகர்வால் | பாலிவுட்டில் தடம் பதிப்பாரா ஜூனியர் என்டிஆர் | மோசடி வழக்கை சட்டப்படி சந்திப்பேன் : சாம் சி.எஸ் | பூமிகா ஆசை நிறைவேறுமா? | ஹீரோ இல்லாமல் நடந்த 'ஹரிஹர வீரமல்லு' பட விழா |
வரலாற்று சிறப்புமிக்க பல படங்களை இயக்கியவர் ஸ்ரீதர். ஆனால் அவர் பிற்காலத்தில் இயக்கிய படங்கள் அவருக்கு பெரிய பெயரை பெற்றுத் தரவில்லை. அதோடு கடும் விமர்சனங்களைத்தான் எதிர்கொண்டார். அதில் முக்கியமான படம் 'சௌந்தர்யமே வருக'.
இந்த படத்தில் சிவச்சந்திரன், சத்தார், ஸ்ரீப்ரியா, ரதி ஆகியோர் நடித்திருந்தார்கள். விஜயபாஸ்கர் இசை அமைத்திருந்தார். பாடல்கள் அனைத்தும் ஹிட்டானது. படம் தோல்வி அடைந்தது. இரு காதல் ஜோடிகள் அமெரிக்கா செல்கிறார்கள். அங்கு அவர்கள் சந்திக்கும் சில பிரச்சினைகள் என்கிற ஒன் லைன் கதையை வைத்துக் கொண்டு படம் முழுக்க அமெரிக்காவை சுற்றிக் காட்டிய ஸ்ரீதர், சிறிதும் லாஜிக் இல்லாத காட்சிகள், குறிப்பாக சண்டை காட்சிகளை கொண்டு படத்தை நிரப்பி இருந்தார்.
அப்போது படத்தை விமர்சித்த பத்திரிகைகள் 'சௌந்தர்யமே நீ வந்திருக்க வேண்டாம்'. என்றே விமர்சித்தன. 'யானைக்கும் அடி சறுக்கும்' என்ற பழமொழி ஸ்ரீதருக்கும் பொருந்தும்.