நேரடியாக ஓடிடியில் வெளியாகும் பிரித்விராஜின் ஹிந்தி படம் | 'பாம்' : காமெடியாக ஒரு படம் | 'என் குறும்பர்கள்' என பதிவிட்ட ரவி மோகன் : 'சூழ்ச்சி' என பதிவிட்ட ஆர்த்தி | தயாரிப்பாளர் சங்கம் - பெப்சி மோதல் : பேசி தீர்க்க கோர்ட் உத்தரவு | ஹிந்தி, தெலுங்கில் ரீமேக் ஆன மேஜர் சுந்தரராஜன் படம் | பிளாஷ்பேக் : மர்மயோகியாக மாறிய கரிகாலன் | பிளாஷ்பேக்: எம் ஜி ஆரின் அரசியல் நிலைபாட்டிற்கு அடித்தளமிட்ட “நம் நாடு” | சினிமா ஆன பெண் குல தெய்வங்களின் கதை | தயாரிப்பாளர் மகன் நடிக்கும் ஆக்ஷன் படம் | மீண்டும் வெளிவரும் 'இதயக்கனி' |
பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்துவிட்டாலே பல சர்ச்சைகள் வெடித்துவிடும். நிகழ்ச்சியை ரசித்து விமர்சிப்பவர்கள் ஒருபுறம் என்றால், மறுபுறம் பிக்பாஸ் நிகழ்ச்சியை எதிர்த்து கொடி பேனர்களுடன் கூட்டமாக சிலர் போராட சென்று விடுகின்றனர். இது போன்ற போராட்டங்கள் வருடந்தோறும் வாடிக்கையானாலும் இறுதியில் பிக்பாஸ் நிகழ்ச்சி வெற்றிகரமாக அடுத்தடுத்த சீசன்களை கடந்து தான் வருகிறது.
தற்போது பிக்பாஸ் சீசன் 8 ஆரம்பித்து ஒரு மாதம் கடந்து விட்ட நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பினை சேர்ந்தவர்கள் பிக்பாஸ் நிகழ்ச்சியை தடை செய்யக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள், பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழ் கலாசாரத்திற்கு எதிராகவும், கலாசாரத்தை சீரழிக்கும் வகையிலும் இருப்பதாக கூறி மத்திய மாநில அரசுகள் பிக்பாஸ் நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டும் என வேண்டுகோள் வைத்துள்ளனர்.