மீண்டும் இணையும் எழில், விஷ்ணு விஷால் கூட்டணி | பால்டப்பாவை இயக்கும் விஜய் மில்டன் | சாய் தன்ஷிகாவை திருமணம் செய்கிறார் நடிகர் விஷால்.? | கடந்தவாரம் வெளியான படங்களுக்கு வரவேற்பு எப்படி | பிளாஷ்பேக்: பொன்விழா ஆண்டில் எம்ஜிஆர்.,ன் “நினைத்ததை முடிப்பவன்” | 'ஜெயிலர் 2' படப்பிடிப்பு தளத்தில் ரஜினியை சந்தித்த வீரதீர சூரன் வில்லன் நடிகர் | சூர்யா 46 இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்குமார் | ஹைதராபாத்தில் நடந்த சூர்யாவின் அடுத்த பட பூஜை | 'தக் லைப்' டிரைலர் : 24 மணி நேர சாதனை என்ன? | 'ரெட்ரோ' 235 கோடி வசூல்: ஷாக் ஆன ரசிகர்கள் - உண்மை என்ன? |
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் கடந்த 1ம் தேதி முதல் புதிய படங்களை தொடங்க தடை விதித்துள்ளது. படப்பிடிப்பு செலவுகள் அதிகரிப்பு, நடிகர்களின் சம்பள உயர்வு உள்ளிட்ட பல பிரச்னைகளை திரைத்துறை சார்ந்த அனைத்து சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி மறுசீரமைப்பு செய்வதற்காக இந்த அறிவிப்பை வெளியிடுவதாக தயாரிப்பாளர் சங்கம் விளக்கமளித்தது.
இந்த அறிவிப்புக்கு ஆரம்பத்தில் இருந்தே தென்னிந்திய நடிகர் சங்கம் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. தயாரிப்பாளர் சங்கம் தன்னிச்சையாக செயல்படுவதாகவும் குற்றம்சாட்டி வந்துள்ளது. இந்த நிலையில் நடிகர் சங்கத் தலைவர் நாசர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் படப்பிடிப்பு பணிகளை முடக்குவதாக அறிவிப்பு வெளியானது குழப்பத்தை விளைவிக்கிறது. இந்த தன்னிச்சையான முடிவினால் மிகப்பெரும் பாதிப்பிற்கு உள்ளாகப்போவது தமிழ்த் திரைத்துறை தொழிலாளிகள் மட்டுமல்ல, முதலீடு செய்யும் தயாரிப்பாளர்களுக்கும் அது பெரும் இழப்பையே ஏற்படுத்தும். அனைவரும் ஒன்றிணைந்து ஒருமித்த தீர்வுகாண முற்படும் வேளையில், வேலை நிறுத்தம் முட்டுக்கட்டையாகவே கருதப்படும்.
அத்தகைய செயல்பாட்டை தென்னிந்திய நடிகர் சங்கமும் ஒருபோதும் ஆதரிக்காது. அதேசமயம், தமிழ்த் திரைத்துறை தொழிலாளர்களின் நன்மைக்கான எந்த நடவடிக்கையிலும் ஒன்றிணைந்து, ஒற்றுமையாக செயலாற்ற தென்னிந்திய நடிகர் சங்கம் எப்போதுமே முன்னிலை வகித்துள்ளது. இனியும் அந்த நிலைப்பாடு தொடரும். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.