சூர்யா 45 படத்திலிருந்து ஏஆர் ரஹ்மான் விலகல் | சோஷியல் மீடியா ட்ரோலில் பாதிக்கப்படுவது நடிகைகள் தான் - வாணி போஜன் | மீண்டும் சீரியலில் 'மோதலும் காதலும்' சமீர்! | இந்தியாவில் முதல் நாளில் அதிக வசூலைக் குவித்த டாப் 10 படங்கள் எது தெரியுமா...? | புதிய கார் வாங்கிய ஸ்வாதி கொன்டே! | ஆசை நிறைவேறிய மகிழ்ச்சியில் அணிலா! | தமன்னாவின் நடனத்திற்கு தடை போட்ட ஹரிஹரன்-சங்கர் மகாதேவன் அன் கோ | இவர்தான் பஹத் பாசிலா ? 'புஷ்பா 2' பார்த்த நடிகைக்கு வந்த சந்தேகம் | ஹேக் செய்யப்பட்ட ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் வாட்ஸ்அப் கணக்கு | ஹீரோவை கைகுலுக்க மறந்த ஹீரோயின் ; தொடரும் கைகுலுக்கல் கலாட்டா காமெடி |
தமிழ், தெலுங்கு, ஹிந்தியில் பிஸியாக நடித்துக் கொண்டிருப்பவர் ராஷ்மிகா மந்தனா. அவருக்கும் தெலுங்கு நடிகரான விஜய் தேவரகொண்டாவுக்கும் காதல் என கடந்த சில வருடங்களாகவே டோலிவுட்டில் கிசுகிசுத்து வருகிறார்கள். மாலத்தீவிற்கு சுற்றுலா சென்ற போது கூட இருவரும் ஒன்றாகத்தான் சென்றார்கள். ஆனால், சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களைத் தனித்தனியாகப் பதிவிட்டார்கள் என்றும் பரபரப்பு எழுந்தது.
கர்நாடகா மாநிலத்தில் உள்ள கூர்க் தான் ராஷ்மிகாவுக்கு சொந்த ஊர். ஐதராபாத்திலும் ஒரு வீடு வைத்துள்ளார். இந்நிலையில் இந்த வருட தீபாவளியை ஐதராபாத்தில் உள்ள விஜய் தேவரகொண்டா வீட்டில் அவருடைய குடும்பத்தினருடன் கொண்டாடியுள்ளார் என்று சொல்லப்படுகிறது.
தீபாவளியின் போது எடுத்த சில புகைப்படங்களைப் பகிர்ந்து, “தீபாவளி போட்டோஷுட் முடிந்தது. மகிழ்ச்சியான தீபாவளி,” என்று குறிப்பிட்டு புகைப்படம் எடுத்ததற்காக விஜய் தேவரகொண்டாவின் தம்பி ஆனந்த் தேவரகொண்டாவிற்கு நன்றி தெரிவித்து, 'நன்றி ஆனந்ததததா..,” என்று குறிப்பிட்டுள்ளார். அவரது தீபாவளி புகைப்படங்களுக்கு மொத்தமாக 6 மில்லியன் லைக்குகள் கிடைத்துள்ளன.
விஜய் தேவரகொண்டாவின் வீட்டில் எடுத்த புகைப்படங்கள்தான் அவை என்பது பார்க்கும் போதே தெரிகிறது என்பதுதான் ரசிகர்களின் கமென்ட்டாக உள்ளது.