போன வாரமும் ஏமாற்றம் : தீபாவளியாவது களை கட்டுமா? | அக்கா, தங்கை, அம்மாவாக நடிப்பேன்: ரஜிஷா விஜயன் | அல்லு அர்ஜுன் ரசிகர் மன்றம் பதிவுடன் ஆரம்பம் | அன்றும்... இன்றும்... மணிகண்டனின் தன்னம்பிக்கைப் பதிவு | சினிமா வருமானம் போச்சு: அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய சுரேஷ் கோபி முடிவு | மனநல தூதர் ஆனார் தீபிகா | திருத்தங்களுடன் வெளிவருகிறது 'அஞ்சான்' | எனக்கு படங்கள் இல்லையா? : மொய் விருந்தில் ஆவேசமான ஐஸ்வர்யா ராஜேஷ் | 'காந்தாரா' பாணியில் உருவாகும் 'மகாசேனா' | பிளாஷ்பேக்: விஜயகாந்த், கமல் இணைந்து நடித்த ஒரே படம் |
கடந்த 2000ம் ஆண்டில் மணிரத்னம் இயக்கத்தில் மாதவன், ஷாலினி இணைந்து நடித்து வெளிவந்த படம் 'அலைபாயுதே'. இந்த படம் ஒரு ட்ரெண்ட் செட் படமாக அமைந்தது. ஏ.ஆர்.ரஹ்மானின் இனிமையான பாடல்களும் படத்தின் வெற்றிக்கு பக்கபலமாய் அமைந்ததோடு இந்த காலகட்டத்திலும் தமிழில் வெளிவந்த சிறந்த காதல் படங்களில் அலைபாயுதே படமும் இடம் பெறும் அளவிற்கு ரசிகர்கள் மத்தியில் நீங்காத இடம் பெற்றுள்ளது.
இந்த நிலையில் அஜித் மனைவி மற்றும் நடிகையுமான ஷாலினி அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சமீபத்தில் மாதவனுடன் உள்ள போட்டோ ஒன்றை பகிர்ந்துள்ளார். இந்த போட்டோவை ரசிகர்கள், ‛24 வருடங்களுக்கு பிறகு கார்த்திக், சக்தி' என்கிற தலைப்போடு வைரலாக்கினர்.
அலைபாயுதே படத்தில் கார்த்திக் வேடத்தில் மாதவனும், சக்தி வேடத்தில் ஷாலினியும் நடித்தனர்.