பரபரப்பில்லாமல் இன்றைய வெளியீடுகள் | ஆறு மாதங்கள் தள்ளிப் போனது 'இட்லி கடை' | கார் பார்க்கிங் பிரச்னை : பிக்பாஸ் பிரபலம் தர்ஷன் கைது | இந்தியன் 3 படத்தின் பணிகள் மீண்டும் துவங்கியது | இறுதி கட்டத்தில் 'லவ் மேரேஜ்' | பிளாஷ்பேக் : இந்தியன் பனோரமாவில் திரையிடப்பட்ட முதல் தமிழ்படம் | பிளாஷ்பேக் : லலிதா, பத்மினிக்காக காத்திருந்த ரசிகர்கள் | ஆஸ்கர் விருது வரை சென்ற 'லபாட்டா லேடீஸ்' படம் கதை காப்பி சர்ச்சையில் சிக்கியது | சினிமா ஆனது இந்தியாவின் முதல் மகாத்மாவின் வாழ்க்கை | 'பயர்' 50வது நாள் : சவாலான படங்களை தயாரித்து, இயக்க ஜே சதீஷ் குமார் முடிவு |
இந்தியாவில் நடைபெறும் திரைப்பட விழாக்களில் முக்கியமானது கோவா சர்வதேச திரைப்பட விழா. இதன் 55வது விழா நவம்பர் 20ம் தேதி முதல் 28ம் தேதி வரை பனாஜி நகரில் நடைபெற உள்ளது. அந்த விழாவில் இந்திய பனோரமா பிரிவில் 25 திரைப்படங்கள், 20 வணிக அம்சம் அல்லாத திரையிடப்பட உள்ளது.
அந்த 25 திரைப்படங்களில் 5 திரைப்படங்கள் முக்கியத் திரைப்படங்களாகத் தேர்வாகியுள்ளது. அந்த ஐந்தில் 'கல்கி 2898 ஏடி (தெலுங்கு), மஞ்சுமல் பாய்ஸ் (மலையாளம்), கர்கானு (குஜராத்தி), 12வது பெயில் (ஹிந்தி), ஸ்வார்கரத் (அசாமி) ஆகிய படங்கள் இடம் பெற்றுள்ளது. மற்ற 20 திரைப்படங்களில் ஒரே ஒரு தமிழ்ப் படமாக கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் வெளிவந்த 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' தேர்வாகி உள்ளது. இந்தத் தேர்வுகளில் மொத்தம் 384 இந்தியத் திரைப்படங்கள் கலந்து கொண்டன.
வணிக அம்சம் அல்லாத 20 திரைப்படங்களில் 'அம்மாஸ் ப்ரைடு' மற்றும் 'சிவந்த மண்' ஆகிய இரண்டு படங்கள் தேர்வாகி உள்ளது. இந்தத் தேர்வில் மொத்தம் 262 படங்கள் கலந்து கொண்டன.
இந்திய பனோரமா 2024 முதல் திரைப்படமாக ரந்தீப் ஹுடா இயக்கிய “ஸ்வதந்த்ரிய வீர் சாவர்கார்' படம் திரையிடப்பட உள்ளது.