இளம் நடிகருடன் காதலா? - கோட் நடிகை விளக்கம் | ஏஆர் ரஹ்மான் பிரிவுக்கும், மோகினி டே பிரிவுக்கும் சம்பந்தம் இல்லை: சாய்ரா பானு வழக்கறிஞர் விளக்கம் | என் மகளை மீட்டு தந்தது செட்டிக்குளங்கரா தேவி தான் : நயன்தாரா அம்மா உருக்கம் | மலையாள வாரிசு வில்லன் நடிகர் மேகநாதன் மறைவு | கிஸ் படத்திலிருந்து அனிரூத் விலகலா? | சம்பந்தி இது சரியில்லை : ‛ராஜாகிளி' பட விழாவில் அர்ஜூன் கலாட்டா | ராம் பொதினேனிக்கு ஜோடியான பாக்யஸ்ரீ போர்ஸ் | சிவகார்த்திகேயனுக்கு வில்லனா? மறுப்பு தெரிவித்த விஷால் | ஹாலிவுட் மியூசிக் மீடியா விருது: ஆடுஜீவிதம் பின்னணி இசைக்காக வென்றார் ஏ.ஆர்.ரஹ்மான் | விஜய் 69வது படத்தில் இணையும் வரலட்சுமி |
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், கார்த்தி நடிப்பில் 2019ல் வெளிவந்த படம் 'கைதி'. சிறந்த விமர்சனங்களையும், வரவேற்பையும் பெற்றது. அந்தப் படத்தின் வெற்றிதான் லோகேஷ் கனகராஜுக்கு விஜய் படத்தையும் இயக்குவதற்கான வாய்ப்பைப் பெற்றுத் தந்தது.
அதன் பின் விஜய் நடிப்பில் 'மாஸ்டர், லியோ' படங்களையும் கமல் நடிப்பில் 'விக்ரம்' படத்தையும் இயக்கி, தற்போது ரஜினி நடிக்கும் 'கூலி' படத்தை இயக்கி வருகிறார். 'கைதி' படம் வெளியான பின்பு அதன் இரண்டாம் பாகம் வரும் என்று அப்படம் சம்பந்தப்பட்டவர்கள் அடிக்கடி பேசி வந்தார்கள்.
தொடர்ந்து பெரிய நடிகர்களின் படங்களை இயக்கும் வாய்ப்பு கிடைத்ததால் அது தள்ளிக் கொண்டே போய் வருகிறது. “விரைவில் டில்லி திரும்ப வருவார்” என இன்று அப்படத்தின் ஐந்தாவது வருடத்தில் லோகேஷ் கனகராஜ் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். இங்கிருந்துதான் அனைத்தும் ஆரம்பமானது. கார்த்தி சார், தயாரிப்பாளர் எஸ்ஆர் பிரபு சார்” ஆகியோருக்கும் இதை நடக்க வைக்கும் 'யுனிவர்ஸுக்கும்' நன்றி,” என்றும் குறிப்பிட்டுள்ளார். 'கைதி' படத்தில் கார்த்தியின் கதாபாத்திரப் பெயர்தான் டில்லி.
எஸ்ஆர் பிரபு தயாரித்த 'மாநகரம்' படம் மூலம்தான் லோகேஷ் கனகராஜ் இயக்குனராக அறிமுகமானார். 'கூலி' படத்திற்குப் பிறகு 'கைதி 2' படம் உருவாகவும் வாய்ப்புள்ளது.