ஷாருக்கானின் மகன் இயக்கும் வெப் சீரிஸில் பாலிவுட் பிரபலங்கள் | மகளுடன் படப்பிடிப்பு செட்டுக்கு சென்ற ராம்சரண் | தங்கலான் படத்திற்காக அதிகம் மெனக்கெட்டேன்: மனம் திறந்த மாளவிகா மோகனன் | திருமணம், குழந்தை பெற்றுக் கொள்வதுதான் முழுமையான வாழ்க்கையா : சமந்தா கேள்வி | ஸ்வீட் ஹார்ட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | மணிரத்னத்துடன் எடுத்த போட்டோ : ராஜ்குமார் பெரியசாமி நெகிழ்ச்சி | வெளியானது 'விடாமுயற்சி' படம்: ரசிகர்களுடன் படம் பார்த்த திரை பிரபலங்கள் | பிளாஷ்பேக் : படப்பிடிப்பிற்கே வந்து நடிகையை கடத்த முயன்றவர்களை அடித்து துரத்திய கொச்சின் ஹனீபா | தான் நடத்திய வழக்கை படமாக இயக்கும் வழக்கறிஞர் | கேரளாவில் இருந்து நடந்தே வந்து விஜய்யை சந்தித்த ரசிகர் |
கடந்த பத்து வருடங்களுக்கு முன்புவரை மலையாளத்தில் மட்டுமே கவனம் செலுத்தி நடித்து வந்த நடிகர் பஹத் பாசில், சமீப வருடங்களில் விக்ரம், புஷ்பா 2, மாமன்னன், வேட்டையன் என தமிழ் மற்றும் தெலுங்கு மொழி படங்களில் நடித்து தனது எதார்த்தமான நடிப்புத் திறமையால் தென்னிந்திய அளவில் மிகப் பெரிய நடிகராக மாறிவிட்டார்.
சமீபத்தில் தமிழில் ரஜினியுடன் அவர் இணைந்து நடித்த வேட்டையன் படம் வெளியான நிலையில் கடந்த வாரம் மலையாளத்தில் அமல் நீரத் டைரக்சனில் குஞ்சாக்கோ போபனுடன் அவர் இணைந்து நடித்த போகன்வில்லா என்கிற படமும் வெளியானது. இதைத் தொடர்ந்து பஹத் பாசில் வில்லனாக நடித்து வரும் புஷ்பா 2 திரைப்படமும் இந்த வருடம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் பிரபல மலையாள இயக்குனர் லால் ஜோஸ் டைரக்சனில் புதிய படம் ஒன்றில் நடிக்க இருக்கிறார் பஹத் பாசில். இது குறித்த அதிகாரப்பூர்வ தகவலை இயக்குனர் லால் ஜோஸ் வெளியிட்டுள்ளார். எழுத்தாளர் கே.என் பிரசாந்த் என்பவர் எழுதிய 'பொணம்' என்கிற நாவலை தழுவி இந்த படம் உருவாக இருக்கிறது. குறிப்பாக கேரள கர்நாடக எல்லையில் அமைந்திருக்கும் வனப்பகுதியில் நடக்கும் ஒரு பழி வாங்கும் கதை பின்னணியில் இது உருவாக இருக்கிறதாம். இதற்கு முன்னதாக 2013ல் லால் ஜோஸ் இயக்கிய இம்மானுவேல் என்கிற படத்தில் மம்முட்டியுடன் இணைந்து நடித்திருந்தார் பஹத் பாசில். அந்த வகையில் 13 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் அவரது டைரக்சனில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.