'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
நடிகர் சிலம்பரசன் தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவர். கடைசியாக இவர் நடித்து வெளிவந்த பத்து தல திரைப்படம் பெரிதளவில் வெற்றி பெறவில்லை. அதன் பின்னர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிம்புவின் 48வது படம் உருவாகிறது என அறிவித்து பல மாதங்கள் கடந்தும் அதன் படப்பிடிப்பு தொடங்கவில்லை. இதையடுத்து மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் உடன் இணைந்து 'தக் லைப்' படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார் சிம்பு.
இந்த நிலையில் இன்று திடீரென சிம்பு அவரது அடுத்த படம் குறித்து பதிவிட்டுள்ளார். அதன்படி, "Dum + Manmadhan + Vallavan + Vtv in Gen Z mode = NAMBA NEXT !!! " என இவ்வாறு தனது அடுத்த படத்திற்கான ஹின்ட் கொடுத்து பதிவிட்டு ரசிகர்களை உற்சாக படுத்தியுள்ளார் சிம்பு.
நாளை
இந்த நிலையில் சிம்பு அவரது எக்ஸ் சமூக வலைத்தள கணக்கில் அடுத்த படம் குறித்து ஹின்ட் கொடுத்து பதிவிட்டிருந்தார். இதைத்தொடர்ந்து இன்று மீண்டும் அது பதிவிட்டுள்ளார் சிம்பு. அதன்படி, ‛‛டேய் 2கே கிட்ஸ், 90ஸ் மூட்ல நாளைக்கு (அக்.,21) ஷார்ப்பாக 6:06க்கு வாரேன்'' என அடுத்த படத்தின் அப்டேட் வெளியிடுவதாக சிம்பு அறிவித்துள்ளார்.